Donald Trump: குறுக்கே வராதீங்க.. குண்டு வீசுவோம்.. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஓமனை எச்சரித்த டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சர்வதேச எண்ணெய் போக்குவரத்து பாதையின் உயிர் நாடி போல இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானும் ஓமனும் இணைந்து புதிய திட்டமிடுவதால், டிரம்ப் கடும் கோபம் அடைந்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஓமன் தலையிட்டால், அந்த நாட்டின் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் எட்டுவதற்காக போடபட்ட 60 நாள் இடைக்கால ஒப்பந்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், அதனை நீட்டிக்க போவது இல்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Donald Trump open threat We will bomb Oman Don t interfere in the Strait of Hormuz issue

ஓமனுடன் ஈரான் கை கோர்ப்பு

ஈரான் வெள்ளைக்கொடி காட்டி சரண் அடைய வேண்டும் என்று டிரம்ப் கூறிய நிலையில், தங்கள் படைகள் தயாராக இருப்பதாக ஈரான் பதிலடி கொடுத்ததால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை சீர் செய்வது தொடர்பாக ஓமன் - ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை பொறுத்தவரை உலக எண்ணெய் வர்த்தகத்தின் 20 சதவீதம் இந்த வழியாகவே நடைபெறுகிறது.

முக்கியமான இந்த வழித்தடத்தை எந்தவித கட்டுப்பாடும் இன்றி திறந்துவிட வேண்டும் என்பது அமெரிக்க்காவின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் ஈரான் இதனை ஏற்க மறுத்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று ஈரான் கூறி வரும் நிலையில், ஓமனுடன் ஈரான் கை கோர்ப்பது டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் மீது குண்டு போடுவோம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்கள் ஈரான் கடல் பரப்பு வழியாக உள்ளே நுழைந்து, ஓமன் கடல் பரப்பு வழியாக வெளியேறும் வகையில், ஒப்பந்தம் எட்டப்பட்டு இருப்பதாக தெஹ்ரான் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக ஈரானும் ஓமனும் தீவிரமாக பணியாற்றி வருவதாக சொல்லப்படும் நிலையில் டிரம்ப் கடும் கோபம் அடைந்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், "ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பட்டுக்கு மாறாக ஓமன் தலையிட்டால், அந்த நாட்டின் மீது குண்டு போடுவோம். ஈரான் சரண் அடைய வேண்டும். ஈரான் உடனான போரில் அமெரிக்க ஆயுதங்களில் வேர்க்கடலை அளவே பயன்படுத்தியுள்ளோம். சரண் அடைய காலக்கெடு எதுவும் இல்லை. அமெரிக்கா இந்த விவகாரத்தில் அவசரப்படவில்லை' என்றார். ஓமனுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுப்பது இது முதல் முறையல்ல.

திட்டவட்டமாக மறுக்கும் ஈரான்

கடந்த மே மாதம் கேபினட் மீட்டிங்கில் பேசிய டிரம்ப், ஓமன் மற்ற நாடுகளை போலவே செயல்பட வேண்டும். இல்லையென்றால் அந்த நாட்டை சிதறடிப்போம்' என்றார். வளைகுடா நடுகளில் ஒன்றான ஓமனும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. ஓமனின் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மற்றும் அமெரிக்காவின் ராணுவ விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கான தளங்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஓமனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில், ஓமன் மீது தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் பிரந்தியமாக அறிவிப்போம் என்று டிரம்ப் மீண்டும் சூசகமாக கூறியுள்ளார். ஈரான் துறைமுக முற்றுகை திறன் வாய்ந்ததாக இருப்பதாகவும், மறைமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் டிரம்பின் இந்த கருத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+