ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த டிரம்ப் முடிவா? வெள்ளை மாளிகை சொல்வது என்ன?
வாஷிங்டன்: ஈரானில் இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. ஒருபோதும் அது மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. இருந்தாலும் அதுவே நடக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த அமெரிக்கா தயாராகி வருகிறதா? என்று சர்வதேச நோக்கர்கள் சந்தேகம் தெரிவித்த நிலையில், வெள்ளை மாளிகை இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
ஈரான் அணு சக்தி தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, கடும் கோபம் அடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கியது.

துவம்சம் செய்துவிடுவேன்
அமெரிக்கா ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கியது. இதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால், சர்வதெச அளவில் எண்னெய் வியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்க வேண்டும், 15 அம்ச திட்டத்தை ஏற்று உடனடியக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த ஈரான், முழுவதுமாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியில் தங்களுக்கு உள்ள இறையாண்மயை விட்டுக்கொடுக்க முடியாது எனக் கூறியது. ஈரான் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டை துவம்சம் செய்துவிடுவேன் என்று டிரம்ப் கடந்த சில நாட்களாக மிரட்டி வருகிறார்.
அணு ஆயுத தாக்குதலா?
இந்த சூழலில் ஈரானுக்கு இறுதியாக செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி (அமெரிக்க நேரப்படி) வரைதான் கெடு.. அதற்குள் ஈரான் அடிபணியாவிட்டால் அந்த நாட்டின் சிவில் நாகரீகம் மொத்தமாக அழிக்கப்படும். மின் நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும் என்று மிரட்டியுள்ளார். ஈரானை மொத்தமாக அழித்துவிட போவதாக டிரம்ப் மிரட்டி வரும் நிலையில், அந்த நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்த உத்தரவிடப்போகிராரா? என்ற யூகங்கள் சர்வதேச ஊடகங்களில் அதிகம் எழுப்ப்பட்டது.
இங்கிலாந்தை சேர்ந்த் மூத்த ஊடகவியலாளர் ஒன் ஜோன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளிய்ட்ட பதிவில், "ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த போகிறேன் என்று டிரம் மிரட்டுவது தெளிவாக தெரிகிறது. இந்த பேரழிவு ஏற்படாமல் தடுக்க டிரம்ப் உடனடியாக நீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று பதிவிட்டு இருந்தார்.
வெள்ளை மாளிகை விளக்கம்
அதேபோல, பிரபல யூடியூபர் கித் எட்வர்ட்ஸ் எழுதிய பதிவில், 'அணு குண்டுகளை வீச டிரம்ப் தயாராகி வருகிறார்' என்று கூறியிருந்தார். அதேபோல, மற்றொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், ஈரானுக்கு எதிராக இதுவரை பயன்படுத்தாத ஆயுதத்தை பயன்படுத்த இருப்பதாக அச்சுறுத்தி வருகிறார். இத்தகைய ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிடும் அதிகாரம் டிரம்பிடம் மட்டுமே உள்ளது.
அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான ஒரு தந்திரமாக இருக்குமோ? என்று பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த தகவல்களை எல்லாம் திட்டவட்டமாக அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை அமெரிக்கா பயன்படுத்த போவதாக எந்த ஒருகுறியீடும் ஜேடி வான்சின் பேச்சில் இடம் பெறவில்லை" என்று விளக்கமளித்துள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications