தங்க கோப்பையை தரமாட்டேன்.. உலககோப்பை கால்பந்து சம்மேளன தலைவருக்கு ஷாக் கொடுத்த டிரம்ப்! சிரிப்பலை
வாஷிங்டன்: அடுத்த ஆண்டு நடக்கும் உலககோப்பை கால்பந்து போட்டியை 3 நாடுகள் ஏற்று நடத்துகிறது. அதில் அமெரிக்காவும் ஒன்று. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை உலககோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் FIFA தலைவர் கியான இன்ஃபேன்டினோ சந்தித்தார். அப்போது அவரிடம் இருந்து தங்க கோப்பையை வாங்கிய டிரம்ப் திரும்ப வழங்கமாட்டேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியோடு அனைவரையும் சிரிக்க வைத்தது.
கால்பந்து ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் உலகோப்பை போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒருமுறை உலககோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.

அடுத்த ஆண்டு நடக்கும் கால்பந்து உலககோப்பை போட்டியை அமெரிக்கா- கனடா - மெக்சிகோ இணைந்து நடத்துகிறது. இந்த போட்டியில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் கனடா மற்றும் மெக்சிகோவில் குரூப் பிரிவில் தலா 10 போட்டி உள்பட மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளது. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் அமெரிக்காவில் உள்ள 11 நகரங்களில் நடைபெற உள்ளது. 2026 உலககோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் உலககோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் FIFA அமைப்பை சேர்ந்தவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நேற்று சந்தித்தனர். அதன் தலைவர் கியானி இன்ஃபேன்டினோ தலைமையில் அனைவரும் டிரம்பை சந்தித்தனர்.
அப்போது கால்பந்துபோட்டிக்கான உலககோப்பை பற்றி விளக்கி அது டிரம்பிடம் வழங்கப்பட்டது. அதனை வாங்கி கொண்ட டிரம்ப். மீண்டும் அதனை தர மாட்டேன். நானே வைத்து கொள்வேன் என்று வேடிக்கையாக கூறினார். இது அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது.
ஃபிஃபா கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று உலககோப்பை வெல்லும் அணிக்கு தங்க கோப்பை வழங்கப்படும். இந்த கோப்பை 6.175 கிலோ எடையுடன், 36.8 செ.மீ உயரம், 12.5 செ.மீ அகலம் கொண்டது. இந்த கோப்பை 18 காரட் தங்கம் உள்பட பிற உலோக கலவையால் செய்யப்பட்டது. கோப்பையின் அடிப்பாகம் பச்சை மலாக்கிட்டால் செய்யப்பட்டது. இதனால் இந்த கோப்பையை தங்க கோப்பை என சொல்வது உண்டு.












Click it and Unblock the Notifications