டிரம்ப் கணக்கை பாருங்க.. சவுதி, கத்தார் உட்பட.. 3 பணக்கார நாடுகளுக்கு கிளம்புகிறார்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் இந்த வாரம் உலகின் டாப் 3 பணக்கார நாடுகளுக்குச் செல்கிறார். இந்த பயணத்தின்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. புவிசார் அரசியல் மிக வேகமாக மாறி வரும் நிலையில், டிரம்ப்பின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்கா உடன் வலுவான உறவுகளை வளர்த்துக் கொண்டன. இதற்கிடையே டிரம்ப் இப்போது மூன்று வளைகுடா நாடுகளுக்கு அவர் செல்கிறார். இந்த வாரம் அவர் சவுதி, கத்தார் மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளுக்குச் செல்கிறார்.

Donald Trump s Gulf Visit 2025 600B Deals in Saudi Qatar UAE Take Center Stage

வளைகுடா நாடுகள்

டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற பிறகு, அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இந்த பயணத்தின் போது அரசு நாடுகள் அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை உறுதியளித்துள்ளன. அமெரிக்காவுடனான தங்கள் உறவின் மூலம் பொருளாதார, ராணுவ நன்மைகளைப் பெற முடியும் என இந்த நாடுகள் நம்புகின்றன.

சவுதி

பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பில் சவுதி அரேபியா கவனம் செலுத்துகிறது. சவுதி அரேபியா அமெரிக்காவுடனான தனது பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. தற்போதைய சூழலில் பாதுகாப்பு மட்டுமே சவுதி உட்பட அரபு நாடுகளுக்கு முக்கியமானதாக இருப்பதாக மத்திய கிழக்கு அரசியலை நீண்ட நாள் கவனித்து வரும் வல்லுநர் அலி ஷிஹாபி குறிப்பிடுகிறார். பைடன் அதிபராக இருந்த போது அவர் அரபு நாடுகள் விவகாரத்தில் பெரியளவில் அக்கறை காட்டவில்லை. ஆனால், டிரம்ப் மத்திய கிழக்கு விவகாரத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறார். இதன் மூலம் வளைகுடாவில் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படலாம்.

மேலும், மின்சார உற்பத்திக்காகச் சவுதி ஒரு அணுசக்தி திட்டத்தை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளது. இருப்பினும் யுரேனியம் செறிவூட்டல் விவகாரம் காரணமாகத் தாமதமாகியுள்ளது. செறிவூட்டப்பட்ட யூரேனியம் அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதால் இதில் பல தடைகளைச் சவுதி எதிர்கொண்டுள்ளது. டிரம்ப் பயணத்தின்போது அந்த சிக்கல்களைத் தீர்க்கலாம். இதன் மூலம் சவுதி அணு சக்தி திட்டத்தைச் செயல்படுத்தலாம். இது அணுசக்தித் துறையில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கும் லாபகரமானதாக இருக்கும்.

Donald Trump s Gulf Visit 2025 600B Deals in Saudi Qatar UAE Take Center Stage

ஐக்கிய அமீரகம்

அதேபோல ஐக்கிய அமீரகத்தைப் பொறுத்தவரை ஏஐ தொழில்நுட்பத்தில் முக்கிய டீல்களை இறுதி செய்ய முயல்கிறது. அமெரிக்காவுடன், குறிப்பாகத் தொழில்நுட்பத் துறையில், உறவுகளை மேம்படுத்த ஐக்கிய அமீரகம் முயல்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஏஐ, செமி கண்டெக்டர், எனர்ஜி துறைகளில் $1.4 டிரில்லியன் முதலீடு செய்ய ஐக்கிய அமீரகம் உறுதி பூண்டுள்ளது. அமெரிக்கா ஐக்கிய அமீரக உறவை வலுப்படுத்த வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவது அவசியம் என்கிறார் எமிரேட்ஸ் கொள்கை மையத்தின் தலைவர் எப்தேசம் அல்கெட்பி!

அதிலும் குறிப்பாக ஏஐ துறையில் கவனம் செலுத்த ஐக்கிய அமீரகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், அமெரிக்காவிலிருந்து ஏஐ ஏற்றுமதிகளைப் பெறுவதில் ஐக்கிய அமீரகம் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறது. இந்த கட்டுப்பாடுகள் டிரம்பின் பயணத்தின் போது தளர்த்தப்படலாம். அப்படிக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டால் அது ஐக்கிய அமீரகத்திற்கு பூஸ்ட்டாக இருக்கும்.

கத்தார்

அடுத்து கத்தார்.. பாதுகாப்புதான் கத்தாருக்கு முக்கிய சிக்கலாக இருக்கிறது. ஏனெனில் மத்திய கிழக்கில் அமெரிக்க மிகப் பெரிய ராணுவத் தளம் கத்தாரில் தான் இருக்கிறது. அமெரிக்காவும் கத்தாரும் சமீபத்தில் தங்கள் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளன. மேலும் கத்தாருக்கு நேட்டோ அல்லாத ஒரு முக்கிய நட்பு நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா வழங்கியுள்ளது. காசா மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் மத்தியஸ்தராக கத்தார் முக்கிய பங்கு வகித்த நிலையில், அமெரிக்காவுடனான அதன் செல்வாக்கை அதிகரித்துள்ளது.

சிரியாவுக்கு கத்தார் ஆதரவாக இருக்கிறது. ஆனால், சிரியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், அதை நீக்குவதே கத்தாரின் பிரதான முயற்சியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+