வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'ஹவுடி மோடி' நிகழ்ச்சி நடந்து 2 நாள்தான் ஆகிறது.. இம்ரானை பார்த்ததும் ட்ரம்ப் இப்படி மாறிட்டாரே!

Google Oneindia Tamil News

Recommended Video

    இம்ரானை பார்த்ததும் ட்ரம்ப் இப்படி மாறிட்டாரே! | Donald Trump

    வாஷிங்டன்: பாகிஸ்தானை தாம் நம்புவதாகவும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நடைபெற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ஒரே மேடையில் இணைந்து பங்கேற்றார் டொனால்ட் டிரம்ப்.

    Donald Trump says he trust Pakistan

    அப்போது டொனால்ட் ட்ரம்ப்பை பார்வையாளர் இடத்தில் வைத்துக்கொண்டு, பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளை மறைமுகமாக பட்டியலிட்டார் நரேந்திர மோடி. ஒரு படி மேலே போய் மீண்டும் டொனால்டு டிரம்ப் அதிபராக வர வேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் மோடி தெரிவித்தார்.

    இந்தியா மற்றும் அமெரிக்கா நடுவே உறவு வலுப்பெற்றுள்ளதாக வெளி விவகாரத் துறை வல்லுநர்கள் கருதிய நிலையில், இப்போது திடீரென மீண்டும் ஒரு பல்டி அடித்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    கத்தார் இளவரசர், ஜெர்மனி அதிபர் உட்பட பல நாட்டு தலைவர்களுடன் மோடி சந்திப்புகத்தார் இளவரசர், ஜெர்மனி அதிபர் உட்பட பல நாட்டு தலைவர்களுடன் மோடி சந்திப்பு

    ஏற்கனவே ட்ரம்ப் இவ்வாறு இருமுறை கருத்து கூறிய நிலையில், யாருடைய மத்தியஸ்தமும் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இப்போது இம்ரான் கானை சந்தித்த பிறகு மீண்டும் அதே ராகத்தில் பாடியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

    இதுபற்றி அவர் கூறுகையில், நான் பாகிஸ்தானை நம்புகிறேன். காஷ்மீரில் அனைவரும் சம மதிப்புடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நரேந்திர மோடியுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. அதே போலத்தான் இம்ரான் கானுடன் நல்ல உறவு உள்ளது. இரண்டு பேருமே ஒப்புக்கொண்டால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    US President Donald Trump reiterates that he believes in Pakistan and mediates in Jammu and Kashmir issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X