கிம் எப்படி இருக்காருன்னு டிரம்ப்புக்கு நல்லா தெரியுமாம்.. ஆனால் வெளியில் சொல்ல மாட்டாராம்!
வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து எனக்கு தெரியும். ஆனால் இப்போது வெளிப்படையாக எதையும் சொல்லமாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வடகொரிய அதிபர் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வெளியுலகில் தோன்றாமல் உள்ளார். இது பெரும் யூகங்களை கிளப்பி வருகிறது. அவர் இறந்துவிட்டார் என்றும் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் அவர் நல்லா இருக்கிறார் என்றும் பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன.
வடகொரியா தன் அதிபர் தொடர்பான தகவல்களை அவர்களாக அறிவித்தாலொழிய அங்கிருந்து ஒரு சிறு தகவலையும் யாராலும் பெற முடியாது என்பதுதான் உண்மை.

உடல்நலம்
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அது குறித்து இப்போது பேச முடியாது. அவர் உடல்நலமுற்று இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கிம் எதிர்பார்த்தார்
கிம் ஜாங் உன்னுடன் எனக்கு நல்ல நட்புறவு உள்ளது. நான் அமெரிக்கா அதிபராக இல்லாதிருந்தால் நீங்கள் (அமெரிக்கா) கொரியாவுடன் போரில் ஈடுபட்டிருந்திருப்பீர்கள். இதையே கிம் எதிர்பார்த்தார். அவர் நன்றாக இருக்க வேண்டும் என நம்புகிறேன். மற்ற தகவல்களைவிட அவர் எப்படியிருக்கிறார் என்பதை நான் அறிவேன். நீங்கள் அதுகுறித்து கேள்விப்படக் கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை என்றார்.

பாதிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதாவது கிம் உடல்நிலை மோசமாக உள்ளதாக அமெரிக்க உளவுத் துறை தகவல் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரியிவில்லை என்றார்.

வடகொரியா
கிம் குறித்து பல்வேறு செய்திகள் உலா வரும் நிலையில் தென் கொரியோ கிம் நலமாகவும் உயிரோடும் இருக்கிறார் என உறுதிப்படுத்தியுள்ளது. கிம் பயன்படுத்திய ரயிலின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. என்ன இருந்தாலும் வடகொரியாவிடம் இருந்து கிம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications