ஈரான் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்க அமெரிக்கா திட்டம்.. டிரம்ப் விடுத்த புதிய மிரட்டல்
வாஷிங்டன்: ஈரானின் பிக்காக்ஸ் மலை மீது விரைவில் அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்துள்ள டிரம்ப், ஈரான் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி பேசினார். தங்களின் முதன்மையான நோக்கம் ஈரான் அணு ஆயுத வலிமை பெறக்கூடாது என்பது மட்டுமே என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தப் போவதாக டிரம்ப் எச்சரித்து இருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான போர் 6 மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ஈரான் போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் போரை முடிவுக்கு கொண்டு வர கத்தார், பாகிஸ்தான் உள்ளிடட் நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால், இதற்கு பலன் எதுவும் கிட்டவில்லை.

ஈரான் கையில் அணு ஆயுதம் கிடைக்கக் கூடாது
குறிப்பாக கடந்த சில நாட்களாக ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் அதிகரித்து இருப்பதால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில், ஈரானின் அணுசக்தி தளமான பிக்காக்ஸ் மலைப்பகுதியில் விரைவில் மிகக்கடுமையான தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்திய சில நாட்களில் டிரம்ப் இந்த மிரட்டலை விடுத்துள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:- எங்களின் முதன்மையான நோக்கம் ஈரான் கையில் அணு ஆயுதம் கிடைக்கக்கூடாது என்பதுதான். தற்போது 5 மாதங்கள் ஆகிவிட்டது. ஐந்து மாதங்களாக என்ன செய்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் ஆணு ஆயுதத்தை பெற முடியாது. இதையே நாங்கள் செய்து இருக்கிறோம்.
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது, ஒருவேளை அப்படி இருந்திருந்தால், நீங்கள் அநேகமாக இங்கு அதிக நேரம் நின்று கொண்டிருக்க மாட்டீர்கள். பிக்காக்ஸ் மலையில் ஏதேனும் செயல்பாடுகளை அமெரிக்கா கண்டறிந்தால் அங்கு தாக்குதல் நடத்தப்படும். பிக்காக்ஸ் மலைப்பகுதியில் ஏதேனும் செயல்படுகள் நடைபெறுகிறதா? என்பதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
மிக பலமான தாக்குதல் நடத்தப்படும்
ஈரான் முழுவதும் நடைபெறும் அனைத்தயும் நாங்கள் அறிவோம். ஏதாவது தவறாக போனால், நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். மிக பலமான தாக்குதல் நடத்தப்படும்' என்றார். மேலும், அமெரிக்கா ராணுவ தலையீடு இருந்ததால்தான் பெரிய அளவில் மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கவில்லை என்று கூறிய டிரம்ப், அமெரிக்கா செயல்பாடு இல்லையென்றால், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு இருக்கும்" என்றார்.
பிக்காக்ஸ் மலைப்பகுதி
ஈரானின் யூரேனியம் செறிவூட்டு மையமாக கருதப்படும் நடான்ஸ் அருகே இந்த பிக்காக்ஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்குதான் ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயற்சிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. கடினமான பாறைகளுக்கு அடியில் 100 மீட்டருக்கும் அதிகமான ஆழ்த்தில் இந்த தளம் உருவக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆழமான பாறைக்கு கீழே அமைந்து இருப்பதால் சாதாரண குண்டுகள், ஏன் பங்கர் குண்டுகளால் கூட இந்த மையத்தை முழுமையாக அழிப்பது கடினம் என்பதே ஈரானின் வல்லுனர்கள் கருத்தாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
