ஒபாமாவையும் அவரது மனைவியையும் குரங்குகளாக சித்தரித்து வீடியோ! டிரம்ப் சும்மாவே இருக்க மாட்டாரு போல!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைகளுக்கான மாதமாக பிப்ரவரி மாதம் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், முன்னாள் அதிபரான ஒபாமாவையும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவையும் குரங்குகளாக சித்தரித்து டிரம்ப் வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் ஒரு நிமிட வீடியோவை நேற்றிரவு ஷேர் செய்திருக்கிறார்.

வீடியோவுக்கு நடுவில்
அந்த ஒரு நிமிட வீடியோ, 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பென்சில்வேனியாவில் வெற்றி பெற்றதை கேள்விக்குள்ளாக்கும் கூற்றுக்களையும் வரைபடங்களையும் கொண்டிருந்தது. ஆனால், 59வது வினாடியில், 'தி லயன் ஸ்லீப்ஸ் டுநைட்' பாடல் ஒலிக்க, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஒரு குரங்கின் உடலில் ஒபாமாவின் முகம் பொருத்தப்பட்ட வீடியோ திடீரெனத் தோன்றியது.
கடும் விமர்சனம்
ட்ரம்ப்பின் இந்த வீடியோவுக்கு சோஷியல் மீடியாக்களில் உடனடியாகக் கண்டனங்கள் எழுந்தன. கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூஸம், தனது பத்திரிகை அலுவலகம் வாயிலாக, "இது அதிபரின் அருவருப்பான செயல். ஒவ்வொரு குடியரசுக் கட்சியினரும் இதை உடனடியாகக் கண்டிக்க வேண்டும்," என்று விமர்சித்திருந்தார்.
யூசர்களின் விமர்சனம்
எக்ஸ் (X) தளத்தில் ஒரு பயனர், "டிரம்ப் ஒபாமா குடும்பத்தினரின் முகங்களை குரங்குகளின் உடலில் பதிவேற்றிய மிக மோசமான இனவெறிப் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். நாள்தோறும் இந்த நபரின் புதிய தாழ்வான நிலையைப் பார்க்கிறோம்" என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், "அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதிலிருந்து வெளிப்படையாக இனவெறி கொண்ட ஒரே அதிபர் டொனால்ட் டிரம்ப் தான். மிச்செல் மற்றும் பராக் ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். குடியரசுக் கட்சி இப்போது இந்தக் கதியை எட்டியுள்ளது" என்று சாடியிருந்தார்.
வீடியோவை நீக்க முயற்சி
டிரம்ப் பதிவை வெளியிட்ட பிறகு, 'ட்ரூத் சோஷியல்' செயலி தற்காலிகமாகச் செயல்படவில்லை. சில பயனர்கள், இந்த போஸ்ட் செயலி முடங்கியதற்கான காரணம் என்றனர். "ட்ரூத் சோஷியல் ஏன் முடங்கியது? பொறியாளர்கள் ட்ரம்ப் பதிந்த சமீபத்திய AI காணொளியை அழிக்க முயற்சிக்கிறார்களா? ட்ரூத் சோஷியலின் பயனர்கள், அவர் பதிவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்" என்று ஒரு பயனர் X இல் பதிவிட்டுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி 3 அன்று, அமெரிக்க தேசபக்தர்களை கௌரவிக்கும் ஒரு பிரகடனத்தை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.
டிரம்பின் குற்றச்சாட்டு
இந்தப் பதிவு, 2020 அதிபர் தேர்தல் பரவலான வாக்காளர் மோசடியால் முறைகேடாக நடத்தப்பட்டது என்ற ட்ரம்ப்பின் தொடர்ச்சியான கூற்றுக்களுக்கும், "அமெரிக்காவில் தேர்தல்களைப் பாதுகாப்போம்" என குடியரசுக் கட்சியினர் விவரிக்கும் 'SAVE சட்டம்' என்ற மசோதாவை முன்னெடுப்பதற்கான முயற்சிக்கும் மத்தியில் ஷேராகியிருக்கிறது.
பிளாக் ஹிஸ்டரி
அமெரிக்காவை பொறுத்தவரை, பிப்ரவரி மாதம் என்பது கருப்பின வரலாற்று மாதமாகும். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆப்பிரிக்க வம்சாவளியினர் நிகழ்த்திய சாதனைகள், சந்தித்த துயரங்கள், அவர்கள் நடத்திய வரலாற்று போராட்டங்கள் ஆகியவற்றை கவுரவிக்கும் விதமாக இந்த பிப்ரவரி மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications