திடீரென சீனாவை ஆதரித்த டிரம்ப்.. உற்று கவனித்த எலான் மஸ்க்.. என்ன இப்படி சொல்லிட்டாரு! பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கிடம் பேட்டியளித்தார். டிரம்ப் இந்த நேர்காணலில் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். குறிப்பாக அவர் இத்தனை காலம் சீனாவைக் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், அவர் திடீரென தனது டோனை மாற்றி இருக்கிறார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் இன்று எலான் மஸ்கிற்கு பேட்டி ஒன்றை அளித்தார்.

இன்று காலை இந்த நேர்காணல் எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) நேரலையில் ஒளிபரப்பானது. 45 நிமிடங்கள் இருந்த இந்த நேர்காணலை சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டர் தளத்தில் நேரலையில் பார்த்தனர்.
பாராட்டு: டிரம்ப் மீது கடந்த மாதம் கொலை முயற்சி தாக்குதல் நடந்த நிலையில், அதைக் குறிப்பிட்ட எலான் மஸ்க் துணிச்சலாகச் செயல்படும் டிரம்பை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே டிரம்பை ஆதரிப்பதாக எலான் மஸ்க் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 அதிபர் தேர்தலின் போது பைடனை ஆதரித்த எலான் மஸ்க், தேர்தல் முடிந்ததில் இருந்தே அவர் பைடனின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.
அதன் பின்னரே அவர் இப்போது டிரம்ப் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்த நேர்காணலின் போது மஸ்க்கின் கேள்விகளுக்கு டிரம்ப் தனது வழக்கமான ஸ்டைலில் நேர்காணலைக் கொடுத்திருந்தார்.
சர்ச்சை: தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்து இருக்காது என்று ட்ரம்ப் கூறினார். மேலும், சர்வாதிகாரிகளாக அறியப்படும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரை திடீரென பாராட்டிய டிரம்ப் அவர்கள் தங்கள் ஆட்சியில் டாப்பில் இருப்பதாகத் தெரிவித்தார். இத்தனை காலம் அவர் சீனாவை கடுமையாக எதிர்த்தே வந்த நிலையில், திடீரென இப்படி சீனாவை பாராட்டியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..
மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், இப்போது கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்த டிரம்ப், கமலா ஹாரிஸ் மட்டும் அதிபர் தேர்தலில் வென்றால் அது அமெரிக்காவுக்கே மிகப் பெரிய ஆபத்து என்றும் அவர் தெரிவித்தார்.
பிஸ்னஸ் பாலிசி குறித்துப் பேசும் போது, ட்விட்டரில் எலான் மஸ்க் எடுத்த பணிநீக்க நடவடிக்கைகளை டிரம்ப் பாராட்டினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்த விஷயத்தில் நீங்கள் செய்தது சரி.. நிறுவனத்தை வாங்குகிறீர்கள்.. வேலையில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறீர்கள். ஸ்டிரைக் செய்தவர்களை வேலையை விட்டு நீக்கிவிடுகிறீர்கள்" என்ற டிரம்ப், ட்விட்டர் நிறுவனத்தை நேரடியாகக் குறிப்பிடாமல் எலான் மஸ்க் நடவடிக்கைகளைப் பாராட்டினார்.
மின்சார வாகனங்கள்: டிரம்ப் இத்தனை காலம் மின்சார வாகனங்களைக் கடுமையாக எதிர்த்தே வந்தார். ஆனால், உலகின் மிகப் பெரிய மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவை நடத்தி வரும் எலான் மஸ்க் ஆதரவுக்குப் பிறகு டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இருக்கிறார். மின்சார கார்கள் குறித்த கேள்விக்கு டிரம்ப், "நான் எலெக்ட்ரிக் கார்களுக்காக தான் இருக்கிறேன். இப்போது எலான் மஸ்க் என்னை ஆதரித்துள்ளார். எனவே, நான் மின்சார கார்களை ஆதரித்தாக வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதேநேரம் இந்த நேர்காணலில் மற்றொரு இடத்தில் ரஷ்யா அல்லது சீனாவை விட அமெரிக்காவிற்கு ஆபத்தான எதிரிகள் இருப்பதாக தெரிவித்த டிரம்ப், அதாவது ரஷ்யாவும் சீனாவும் இணைந்தால் அது பெரிய ஆபத்து என்றும் அதை அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் என்ன நிலை: பைடன் அதிபர் ரேஸில் இருந்த வரை பல ஸ்வீங் மாகாணங்களில் டிரம்ப் தான் முன்னிலையில் இருந்தார். அதேநேரம் கமலா ஹாரிஸ் போட்டிக்கு வந்த பிறகு அங்கே நிலைமை மாறியுள்ளது. பல முக்கிய மாகாணங்களில் டிரம்பை பின்னுக்குத் தள்ளி கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாகவே சமீபத்தில் வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறுகிறது. இந்த நேரத்தில் தனது இமேஜை மீண்டும் பூஸ்ட் செய்யவே டிரம்ப் இந்த நேர்காணலை வழங்கியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications