டிரம்ப் கணுக்காலில் வீக்கம்.. இதயத்துக்கு ரத்தம் செல்வதில் கூட பாதிப்பு ஏற்படலாமாம்.. ஷாக் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு Chronic Venous Insufficiency பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு என்பது என்ன? இதயத்துக்கான ரத்த சப்ளையை எப்படி பாதிக்கும்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீசை வீழ்த்தினார் டொனால்ட் டிரம்ப். இதையடுத்து 2வது முறையாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அவர் Chronic Venous Insufficiency (CVI)-யால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தமிழில் நாள்பட்ட சிறை பற்றாக்குறை என்பார்கள். பொதுவாக கால்களில் தான் இந்த பாதிப்பு ஏற்படும். சமீபத்தில் டொனால்ட் டிரம்ப்பின் கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் தான் Chronic Venous Insufficiency பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது உயிருக்கு ஆபத்தான பாதிப்பு இல்லை என்றாலும் கூட ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் இதற்கு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும்.
ஏனென்றால் Chronic Venous Insufficiency பாதிப்பு என்பது காலில் அரிப்பு, அலர்ஜி, புண் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தலாம். அதுமட்டுமின்றி உடலில் இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை பாதிக்கும். குறிப்பிட்ட இடத்தில் ரத்த ஓட்டத்தை நிறுத்தி வைக்கும். நம் உடலில் இதயத்துக்கு தேவையான ரத்தத்தை சிரை ரத்த குழாய்கள் தான் எடுத்து செல்லும். உடலின் பல்வேறு இடங்களில் இருக்கும் ரத்தத்தை இந்த குழாய்கள் இதயத்துக்கு எடுத்து செல்லும். தமனி ரத்த குழாய்கள் இதயத்தில் இருந்து ரத்தத்தை பிற பாகங்களுக்கு அனுப்பும்.
இந்த டிரம்பிற்கு ஏற்பட்டுள்ள Chronic Venous Insufficiency பாதிப்பால் கால்களில் இருக்கும் சிரை ரத்த குழாயில் ரத்தம் ஓட்டம் சீராகாமல் குறிப்பிட்ட இடத்தில் தேங்குகிறது. இதனால் தான் கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சனை இதயத்துக்கான ரத்த சப்ளையை தாமதப்படுத்தும். இது பயப்படும் படியான பிரச்சனை இல்லை. பொதுவாக 70 வயது நிரம்பியவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வருவது இயல்பு தான். டிரம்ப்புக்கு தற்போது 79 வயது ஆகும் நிலையில் அவர் அந்த பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லிவிட் கூறுகையில், ‛‛டிரம்ப் லேசான கணுக்கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை மூலம் இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது ஆழமான நரம்பு இரத்த உறைவு, தமனி நோய், இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பிரச்சினைகள் போன்ற கடுமையான நிலைமைகள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சமீபத்தில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் FIFA கிளப் உலககோப்டை இறுதி போட்டியில் டிரம்ப்பின் கால்கள் வீங்கி இருந்தது. இதனை கேமராமேன்கள் வீடியோ, போட்டோவாக எடுத்தனர். இது விவாதத்தை கிளப்பிய நிலையில் தற்போது வெள்ளை மாளிகை அதுபற்றி விளக்கம் அளித்துள்ளது.
இதற்கான அறிகுறியாக சில விஷயங்கள் உள்ளன. அதன்படி கால்களில் வலி மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படும். அதேபோல் நீண்டநேரம் நின்ற பிறகு சோர்வு ஏற்படும். கணுக்கால்களை சுற்றி வீக்கம் ஏற்படும். கால்களில் அரிப்பு மற்றும் கூச்ச உணர்வு ஏற்படும். கால்களில் வீக்கம் மட்டுமின்றி தோலில் நிற மாற்றங்கள், புண்களை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்றால் வழக்கமான நடைபயிற்சி, உடல் எடையை கட்டுப்படுத்துதல், கால்களை உயரமாக வைத்து கொள்வது, ஸ்க்லேரோதெரபி சிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் நிலை மோசமாகும் பட்சத்தில் டாக்டரை அணுகி சிகிச்சைகள் பெற்று கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications