டிரம்ப் வரியால் அமெரிக்காவில் எக்குத்தப்பாக எகிறிய விலை.. புலம்பும் அமெரிக்கர்கள்! இப்படி ஆகிடுச்சே
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு இஷ்டத்திற்கு வரிகளை விதித்து வருகிறார். இந்த வரிகளால் அமெரிக்கர்களே அதிக விலை கொடுக்க நேரிடும் எனப் பலரும் எச்சரித்தாலும் அதைத் தாண்டி டிரம்ப் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே டிரம்ப் வரிகளால் அமெரிக்காவில் பொருட்கள் விலை எந்தளவுக்கு உயரத் தொடங்கியுள்ளது என்பதை விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்தது முதலே வரிகளை விதிப்பேன் எனச் சொல்லி மிரட்டி வருகிறார். இப்போது ஒரு வழியாக அவர் உலக நாடுகள் மீது வரிகளை விதிக்க ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தக டீல் எட்டப்படாத அனைத்து நாடுகளுக்கும் டிரம்ப் வரிகளை விதித்து வருகிறார். இதனால் சர்வதேச வர்த்தகம் மோசமாகி வருகிறது.

டிரம்ப்
அதேநேரம் இதனால் அமெரிக்காவிலும் பல பொருட்களின் விலை அதிகரித்து வருகிறதாம். இதற்கிடையே டிரம்ப் வரிகளால் அமெரிக்காவில் பொருட்கள் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைக் காட்டும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மெர்சிடிஸ் சாண்ட்லர் என்ற அந்தப் பெண் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற வால்மார்ட் கடைக்குச் சென்று அங்குப் பொருட்களின் விலை எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை ஒப்பிட்டுள்ளார்.
இணையத்தில் பரவும் வீடியோ
இந்த வீடியோவில் ஆடைகள் விலை எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை சாண்ட்லர் காட்டுகிறார். பழைய விலை அகற்றப்பட்டு அல்லது அதற்கு மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனாலும் ஓரிரு பொருட்களில் பழைய விலை தெரியும் நிலையில், அந்த இரண்டையும் சாண்ட்லர் ஒப்பிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் மேலும், "வால்மார்ட்டில் ஆடைகளைப் பாருங்கள். விலை இருக்கும் கீழ் பகுதி கிழிக்கப்பட்டுள்ளன. ஆனால், மிஸ்ஸான ஒரு டேக்கை பாருங்கள். பழைய விலை $10.98. ஆனால், புதிய விலை $11.98 ஆக உயர்த்தப்பட்டுள்ளது" என்கிறார்.
அதேபோல இன்னொரு டிரஸ் $6.98ல் இருந்து $10.98 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது விலை 57% அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு பொருளின் ரேட் $19.97ல் இருந்து $24.97 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல அங்குக் கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாகச் சொல்கிறார் சாண்ட்லர்.
நீங்களே சென்று பாருங்கள்
அவர் மேலும் கூறுகையில், "நான் சொல்வதை நம்பவில்லையெனில், நீங்களே அருகில் உள்ள வால்மார்ட் அல்லது டார்கெட் கடைக்குச் சென்று பாருங்கள். உங்களுக்கே புரியும்" என்று சாண்ட்லர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இது தொடரும் என்றும் அமெரிக்கர்களே சிரமத்தைச் சந்திக்கப் போகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "ஆஹா, நாம் வரி அதிகம் செலுத்த ஆரம்பித்துவிட்டோம். இனி எல்லாப் பிரச்சனையும் சரி ஆகிவிடுமா? என்ன லாஜிக் இது" என்று விமர்சித்துள்ளார். அதேபோல அங்குள்ள புகழ்பெற்ற டார்கெட் என்ற கடையில் வேலை செய்யும் ஊழியர், தங்கள் கடைகளிலும் எல்லாப் பொருட்களுக்கும், குறிப்பாக ஆடைகளின் பழைய விலை ப்டடியலை அகற்றத் தொடங்கிவிட்டதாகப் பதிவிட்டிருக்கிறார்.
டிரம்ப் வரி
முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீதும் 50% வரிகளை விதித்திருந்தார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதாகச் சொல்லி 50% வரியை டிரம்ப் அறிவித்தார். தற்போது 25% வரி அமலுக்கு வந்துவிட்ட நிலையில், கூடுதல் வரி 25% இந்த மாத இறுதியில் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இதனால் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் சுமார் 40% வரை பாதிப்பு ஏற்படலாம் என்றும் குறிப்பாக ஜவளி துறையில் பாதிப்பு மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
-
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்












Click it and Unblock the Notifications