ஹோர்முஸ் நீரிணை விவகாரம்.. சீனாவுக்கு சிக்னல் கொடுத்த டிரம்ப்.. பதற்றத்தில் ஈரான்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் சுமார் 3,600 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போர் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது அந்த நாடுகளில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஹோர்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள் என்று சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் போர் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 16வது நாளாக தொடரும் போர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானும் பதிலடி கொடுக்கிறது.

Donald Trump

ஹோர்முஸ் நீரிணை

போர் பதற்றம் காரணமாக மேற்கு ஆசிய பகுதிகளுக்கான விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. சூழலுக்கு ஏற்பதான் விமானம் இயக்க முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர். ஈரானில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கடல் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முடக்கத்தால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஹோர்முஸ் நீரினை ஈரான் முடக்கியது. மத்திய அரசு ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்திய கப்பல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஈரான் அரசு கூறி, இந்திய கப்பல்களுக்கு அனுமதியும் வழங்கியுள்ளனர். ஆனாலும் அங்கு பதற்றங்கள் ஓயவில்லை.

டிரம்ப் அழைப்பு

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி அச்சுறுத்தி வருகிறது. ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களின் போர்க் கப்பலை உடனடியாக ஹோர்முஸ் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்படி சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். டிரம்பின் இந்த நகர்வால் ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் மேலும் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்துமோ என்று அச்சம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+