Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதீத ஆவேசத்தில் டிரம்ப்.. அமைதியாக பார்க்கும் கமலா ஹாரிஸ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்! என்ன ஆகும்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் இன்னும் சில மணி நேரங்களில் உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையேயான விவாதம் நடக்கிறது. இந்த விவாதம் எங்கே எப்படி நடக்கும்.. இதற்கான ரூல்ஸ் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

அமெரிக்காவில் இந்தாண்டு நவ. மாதம் நடக்கும் அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருப்பதால் அங்கு பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

us presidential election 2024 kamala harris donald trump

இதற்கிடையே கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையேயான விவாதம் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ளது. இது அமெரிக்க நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை மாலை அதாவது இந்தியா நேரப்படி புதன்கிழமை அதிகாலை நடக்கிறது.

ஏபிசி: கடந்த சில வாரங்களாகவே அமெரிக்காவில் இந்த விவாதம் குறித்தே பேச்சாக இருந்தது. விவாதத்தை எங்கு நடத்தலாம் எப்போது நடத்தலாம்.. எப்படி நடத்தலாம் எனப் பல கட்ட ஆலோசனைகள் நடந்தன. மேலும், விவாதத்தின் ரூல்ஸை இரு தரப்பும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதால் தான் இத்தனை கட்ட ஆலோசனைகள். இந்த விவாதம் அங்குள்ள புகழ்பெற்ற ஏபிசி செய்தி நிறுவனத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

இரு தலைவர்களும் கலந்து கொள்ளும் இந்த விவாதம் பிலடெல்பியாவில் உள்ள தேசிய அரசியலமைப்பு மையத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 9:00 மணிக்கு (0100 GMT புதன்) நடக்கும். இது உலகெங்கும் நேரலை செய்யப்படும். இந்த விவாதத்தை நேரில் பார்க்க மக்களுக்கு அனுமதி இல்லை. அதாவது விவாதம் நடக்கும் ரூமில் பார்வையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

90 நிமிட விவாதம்: இந்த நிகழ்வை ஏபிசி முக்கிய தொகுப்பாளர்களான டேவிட் முயர் மற்றும் லின்சி டேவிஸ் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள். மொத்தம் 90 நிமிடங்களுக்கு இந்த விவாதம் நடக்கும். அதில் இடையில் இரண்டு விளம்பர இடைவெளியும் விடப்படும். மேலும், ஒருவர் பேசும் போது எதிர் தரப்பினரின் மைக் அணைக்கப்படும்.

ரூல்ஸ் என்ன: அமெரிக்காவில் எப்போதும் நடக்கும் விவாதத்தில் இருந்து இது சற்றே மாறுபடுகிறது. பொதுவாக விவாதத்தின் தொடக்கத்தில் வேட்பாளர் தங்கள் ஓபனிங் ஸ்டேட்மெண்டை தருவார்கள். ஆனால், இந்த விவாதத்தில் ஓபனிங் ஸ்டேட்மெண்டிற்கு இடமில்லை. நேரடியாகக் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க 2 நிமிடங்கள் தரப்படும். இதற்கு மறுப்பு தெரிவிக்க எதிர்த் தரப்பிற்கு இரண்டு நிமிடங்கள் வழங்கப்படும். அதேபோல எதாவது சந்தேகம் அல்லது தெளிவுபடுத்த வேண்டி இருந்தால் கூடுதலாக அதற்கு இரண்டு நிமிடங்கள் வழங்கப்படும்.

விவாதத்தின் முடிவில், ஒவ்வொரு வேட்பாளரும் இரண்டு நிமிட எந்தவொரு கேள்வியும் இல்லாமல் நேரடியாக மக்களிடம் பேசுவார்கள். இதில் தான் அவர்கள் மக்களுக்கு நேரடியாக தங்கள் திட்டத்தைச் சொல்லி வாக்களிக்கக் கேட்பார்கள். இதில் யார் முதலில் பேசுவார்கள்.. யார் கடைசியில் பேசுவார்கள் என்பது காயின் டாஸ் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் படி இறுதி ஸ்டேட்மெண்டை முதலில் கமலா ஹாரிஸும் அதைத் தொடர்ந்து டிரம்பும் பேசுவார்கள்.

ஓவர் கட்டுப்பாடு: வேட்பாளர்கள் விவாதம் முழுக்க போடியம் பின்னால் நிற்க வேண்டும். விவாதத்தின் போது முன்கூட்டியே எழுதப்பட்டுத் துண்டு சீட்டு அல்லது நோட்ஸ்களுக்கு அனுமதி இல்லை. டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஒரு பேனா, ஒரு பேப்பர் மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் மட்டுமே வழங்கப்படும். விவாதம் தொடங்கியது முதல் முடிவடையும் வரை தொகுப்பாளரைத் தவிர வேறு யாரும் இருவருடன் பேசக் கூடாது. விளம்பர இடைவெளியின் போதும் பிரச்சார குழுவிடம் கூட அவர்கள் பேசக்கூடாது என்பதும் ரூல்ஸாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+