அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? ஜோ பைடன் விலகலை முன்பே கூறிய பெண் ஜோதிடர் கணிப்பு! ஆஹா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரில் யார் வெல்வார்கள்? என்பது பற்றி பிரபல பெண் ஜோதிடர் ஏமி டிரிப் கணித்துள்ளார். முன்னதாக 2024 அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார், அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் ஜூலை 21ம் தேதி விலகுவார் என்று ஏமி டிரிப் கணித்தது பலித்ததால் தற்போதைய அவரது கணிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடனின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் தான் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் தற்போதே அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக கூறி பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப்புடன் நேருக்கு நேராக நடந்த விவாதம் ஜோ பைடனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஏற்கனவே உடல்நலக்குறைவு, வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜோ பைடன் விலக வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் கூறி வந்த நிலையில் இந்த விவாதம் அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினார். தற்போது ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது கமலா ஹாரிஸ் VS டொனால்ட் டிரம்ப் என மாறி உள்ளது. இவர்கள் 2 பேரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மாகாணங்களுக்கும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதனால் இந்த தேர்தல் என்பது உலகம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார்? என்பது குறித்து பிரபல ஜோதிடர்கள் கணித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பெண் ஜோதிடர் ஏமி டிரிப் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கணிப்பை கூறியுள்ளார். முன்னதாக இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் ஜூலை 21ம் தேதி விலகுவார் என்று கணித்து இருந்தது. அந்த கணிப்பு பலித்த நிலையில் தற்போது தேர்தலில் வென்று அமெரிக்க அதிபராக போவது யார்? என்பதை ஏமி டிரிப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், ‛‛அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியடைவார். டொனால்ட் டிரம்புக்கு சூரியன் பக்கப்பலமாக உள்ளது. மேலும் டொனால்ட் டிரம்பின் Crazyயான செயல்பாடுகள் இந்த முறையும் வெளிபடும்'' என தெரிவித்துள்ளார். இந்த கணிப்பு தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை 11ம் தேதி ஏமி டிரிப் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஜோ பைடன் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவார்'' என தெரிவித்து இருந்தார். அப்போது ஒருவர் அவர் விலகும் சரியான தேதியை சொல்லுங்கள் என கேட்டதற்கு, ஏமி டிரிப் ஜூலை 21ம் தேதி என பதிலளித்து இருந்தார். அதன்படியே ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக கடந்த 21ம் தேதி அறிவித்தார்.
அதேபோல் இந்த பெண் ஜோதிடர் ஏமி டிரிப் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி கமலா ஹாரிஸ் பற்றிய ஒரு கணிப்பை வெளியிட்டு இருந்தார். அதுவும் அப்படியே இப்போது பலித்தது. அதாவது 2020 ஆகஸ்ட் 11ம் தேதி ஏமி டிரப், ‛‛2024 அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார்'' என தெரிவித்து இருந்தார். அதன்படியே தற்போது அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகி உள்ள நிலையில் தற்போது அவரது கணிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications