ஈரானுக்கு உதவினால் மொத்தமாக முடிச்சி விட்டுருவேன்.. பொருளாதார போர்! பிளானை மாற்றிய டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்பாக ஈரானுடன் சீனா, இந்தியா, துருக்கி, ஜெர்மனி, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மிகப்பெரிய அளவில் வர்த்தக உறவை கொண்டு இருந்ந்த நிலையில், ஈரானுடன் இனி பொருளாதார ரீதியிலான உறவுகள் வைத்துக்கொள்ளும் நாடுகள் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கிட்டத்தட்ட 6 மாதமாக சண்டை நீடித்து வருகிறது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர நடந்த பேச்சுவார்த்தைக்கு பலன் கிடைக்கவில்லை. 60 நாள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தமும் முடிவுக்கு வந்த நிலையில், இனியும் ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்தப்போவது இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளர்.

Donald Trump warns countries Giving financial support to Iran says tremendous economic consequences

ஈரானை அடியோடு முடக்க டிரம்ப் திட்டம்

ஹார்முஸ் ஜலசந்தியையும் அமெரிக்கா கைப்பற்றும் என்று டிரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். டிரம்பின் இந்த அறிவிப்புகளால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. ஈரான் வெள்ளைக்கொடி காட்டி சரண் அடைவதை தவிர வேறு வழியில்லை என்று டிரம்ப் கூறிவருகிறார். ஆனால், ஈரான் இதனை நிராகரித்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் உச்சம் தொட்டு வரும் நிலையில், ஈரானை பொருளாதார ரீதியாக அடியோடு முடக்கும் விதமாக அதன் நட்பு நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. டிரம்ப் தனது ட்ரூட் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக என்னை விட வேறு யாரும் சிறந்த வாய்ப்பை ஈரானுக்கு வழங்கியிருக்க முடியாது.

மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கை

ஆனால் ஒப்பந்தத்தை மேற்கொள்ளாமல் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள். எனவே, எந்தவொரு நாட்டுக்கும் எதிராக இதுவரை மேற்கொள்ளாத அளவுக்கு மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவிக்கிறேன். இது இதுவரை இல்லாத அளவிலான பொருளாதாரப் போராகவும், தனிமைப்படுத்தும் நடவடிக்கையாகவும் இருக்கும்.

ஈரானுடன் வர்த்தக உறவுகளை வைத்துக்கொள்ள தங்கள் நிதி அமைப்புகள், வணிகம், விமான நிலையங்கள் என வணிக நடவடிக்கைகளை அனுமதித்து ஈரானுக்கு உயிரூட்டும் எந்த ஒரு நாடாக இருந்தாலும், மிகக் கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எண்ணெய் கடத்தல், பண பரிமாற்றம், கப்பல் பதிவு என அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஈரான் என்ன செய்யப் போகிறது?

ஈரானுடன் வர்த்தக உறவுகளை வைத்துக்கொள்ளும் நாடுகளுக்கு எந்த மாதிரியான நடவடிக்கை பாயும் என்று டிரம்ப் விளக்கமாக கூறவில்லை. அதேபோல, எந்த ஒரு நாட்டின் பெயரையும் குறிப்பிட்டு இந்த பதிவை டிரம்ப் வெளியிடவில்லை. ஏற்கனவே ஈரானின் பொருளாதரத்தை முடக்கும் விதமாக அந்த நாட்டின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ள நிலையில், தற்போது ஈரானுக்கு மேலும் கடுமையான நெருக்கடி கொடுக்கும் வகையில், இந்த பொருளாதார யுத்தத்தை டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் என்ன மாதிரியான எதிர்வினையை ஆற்றப்போகிறது என்று தெரியவில்லை. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் உச்சம் தொட்டு வருவதால் கடந்த ஒரு வார காலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+