இந்தியாவை எச்சரித்த டிரம்ப்? "ரஷ்யாவுடன் பிஸ்னஸ் செய்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்!" பகீர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது டிரம்ப் தரப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க எம்பிக்கள் சில கூடுதல் பொருளாதாரத் தடைகளையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ள டிரம்ப், ரஷ்யாவுடன் பிஸ்னஸ் செய்யும் எந்தவொரு நாடும் கடுமையாகத் தண்டிக்கப்படும் என எச்சரித்தார்.

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் தீவிரமாக முயன்றனர். இருப்பினும், இந்தப் போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. டிரம்ப் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்குப் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார்.

Donald Trump Warns of Severe Sanctions on Countries Doing Business with Russia Over Ukraine War

டிரம்ப் எச்சரிக்கை

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதாவது ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும் மிகக் கடுமையான தடைகளை எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ளார். ரஷ்யாவைக் குறிவைத்து கடுமையான சட்டங்களை அவரது கட்சியினர் கொண்டு வரும் நிலையில், டிரம்ப்பும் இப்போது வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ரஷ்யாவுக்கு டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இருப்பினும், புதின் அதைக் கேட்பதாக இல்லை. இதையடுத்து ரஷ்யாவுக்குக் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் வகையிலும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டத்தை டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் கொண்டு வரவுள்ளனர்.

விளைவுகள் மோசமாக இருக்கும்

இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்விக்கு அதிபர் டிரம்ப், "ஆம், இது தொடர்பாக மசோதாவை கொண்டு வருவதாகச் சொன்னார்கள். நானும் அதை ஆதரிக்கிறேன். அவர்கள் இது தொடர்பான சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். குடியரசு கட்சியினர் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும், ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் மிகக் கடுமையான தடைகளை விதிக்கச் சட்டம் கொண்டு வருகிறார்கள்.

இந்த லிஸ்டில் ஈரானையும் சேர்க்கலாம் என்பதே எனது ஐடியா. அதை நான் பரிந்துரைத்துள்ளேன். இந்தச் சட்டம் வந்தவுடன் ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படும். ஈரானையும் இந்த பார்முலாவில் சேர்ப்பதே சரியாக இருக்கும்" என்றார்.

இந்தியா வரி

முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லியே இந்தியாவிற்கு 50% வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். இருப்பினும், சமீப காலங்களில் டிரம்ப் டோனில் மாற்றம் தெரிகிறது. அதாவது ரஷ்யாவில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யை இந்தியா குறைத்துள்ளதாகவும் இதனால் வரியைக் குறைக்கவுள்ளதாகவும் டிரம்ப் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

500% வரி

அமெரிக்காவில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி எம்பி லிண்ட்சே கிரஹாம் என்பவர் புதிய சட்டத்தை முன்மொழிகிறார். அதன்படி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி விதிக்கப்படும். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர்களுக்கு நிதியளிக்கும் நாடுகளுக்கு எதிராகவே வரி உயர்த்தப்படும் என்று லிண்ட்சே தெரிவித்தார். இதுவரை இந்தச் சட்டத்திற்கு 85 எம்பிக்கள் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அதிபர் டிரம்ப் அதில் கையெழுத்திட்டால் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500% வரிகள் விதிக்கப்படும். இந்த வரி முறை நடைமுறைக்கு வந்தால் அது சர்வதேச வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+