ஆபாச நடிகைக்கு பணம்.. பெண் எழுத்தாளர் பலாத்காரம்.! அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி வரும் சர்ச்சைகள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47ஆவது அதிபராக இன்னும் சில மணி நேரத்தில் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். தொடக்கத்திலேயே டிரம்ப்பை சுற்றிலும் சர்ச்சையை மேகங்கள் சூழ்ந்துள்ளன. அதேநேரம் சர்ச்சைகளுக்கு டிரம்ப் புதியவர் இல்லை.. கடந்த காலங்களிலேயே டிரம்ப் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டிரம்ப் இதற்கு முன்பு ஏற்கனவே 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் அதிபராக இருந்தவர்.. அந்த காலகட்டத்திலேயே இவர் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர்..

ஏராளமான ஊழல் புகார்கள், பாலியல் அத்துமீறல் புகார்கள் கூட இவர் மீது எழுந்துள்ளது. அதன்படி டிரம்ப் மீது கடந்த காலங்களில் எழுந்த ஐந்து மேஜர் புகார்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
ஆபாசப் பட நடிகை வழக்கு:
முதலில் ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கு. டிரம்பின் மனைவி மெலனியா கர்ப்பமாக இருந்த போது ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் டிரம்ப் நெருக்கமாக இருந்துள்ளார். 2016 தேர்தல் சமயத்தில் இது குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்பதைத் தடுக்க ஆபாச நடிகைக்கு அவர் பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளார். இருப்பினும், அந்த பணத்தைத் தேர்தல் செலவு என்று டிரம்ப் கணக்குக் காட்டியது சர்ச்சையானது. இந்த வழக்கில் டிரம்பிற்கு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், அவருக்குத் தண்டனை அல்லது அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை.
பதவி நீக்க விசாரணை:
அதேபோல அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு முறை பதவி நீக்க விசாரணையை எதிர்கொண்ட அதிபரும் டிரம்ப் தான். கடந்த 2019 காலகட்டத்தில் உக்ரைன் தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றத்தின் விசாரணையைத் தடுக்க டிரம்ப் தனது அதிபர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அவர் மீது பதவிநீக்க விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல 2021ல் தேர்தலுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையைத் தூண்டியதாகவும் அவர் மீது பதவிநீக்க விசாரணை நடந்தது. இருப்பினும், இரண்டிலும் குடியரசு கட்சியினரின் ஆதரவால் பதவிநீக்கம் இல்லாமல் தப்பித்துக்கொண்டார்.
பாகுபாடு:
அதேநேரம் டிரம்ப் ஏதோ இப்போது மட்டும் தான் சர்ச்சையில் சிக்குகிறார் என நினைக்க வேண்டாம். டிரம்ப் இளமையாக இருந்த போதில் இருந்தே அவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். 1973ம் ஆண்டிலேயே அமெரிக்க நீதித்துறை நடவடிக்கையை டிரம்பின் ரியல் எஸ்டேட் நிறுவனம் எதிர்கொண்டது. கறுப்பினத்தவர்கள் மற்றும் சிறுபான்மை குழுக்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவதாகச் சொல்லி 1973ஆம் ஆண்டில் டிரம்ப் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல டிரம்ப் கடந்த காலங்களில் நிதி சார்ந்த பல முறைகேடுகளிலும் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. நிகர மதிப்பை உயர்த்தி காட்டியது, கடன்களை மறைத்தது எனப் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது கடந்த காலங்களிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் மீது நடவடிக்கையும் கூட எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகார்கள்:
மேலும், எழுத்தாளர் ஈ. ஜீன் கரோல் என்பவர் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளித்திருந்தார். 1990களில் ஒரு நாள் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் புகார் அளித்தார். கடந்த 2019ம் ஆண்டு இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட சூழலில், 2023ல் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், டிரம்ப்பிற்கு சுமார் 88 மில்லியன் டாலர் அபராதமாகவும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து டிரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் ஈ. ஜீன் கரோல் மட்டுமின்றி பல்வேறு பெண்களும் டிரம்பிற்கு எதிராக பாலியல் புகார்களை முன்வைத்துள்ளனர். 1970கள் முதல் குறைந்தது 20 முதல் 25 பெண்கள் டிரம்பிற்கு எதிராக பாலியல் புகார்களை முன்வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications