வருமான வரியை மொத்தமாக ரத்து செய்யும் டிரம்ப்! அமெரிக்கர்களுக்கு ஜாக்பாட்.. ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அடுத்த கட்டமாக அமெரிக்கா முழுக்க மக்கள் வருமான வரியே செலுத்த வேண்டாம் என்ற உத்தரவைப் பிறப்பிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கக் குடும்பங்கள் பணக்காரர்களாக மாறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராகக் கடந்த வாரம் பதவியேற்ற டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

குறிப்பாகப் பொருளாதாரத்தை மேம்படுத்த முக்கிய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக மாற்றப் போவதாகக் குறிப்பிட்டு வருகிறார்.
வருமான வரி ரத்து:
இதற்கிடையே அமெரிக்க மக்களுக்கான வருமான வரியை மொத்தமாக ரத்து செய்யும் திட்டம் தன்னிடம் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் அமெரிக்க மக்களைப் பணக்காரர்களாக ஆக்க முடியும் என்றும் இது செலவழிக்க அவர்களுக்கு அதிகப் பணத்தைத் தரும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இதனை டிரம்ப் வெற்றிகரமாகச் செயல்படுத்தினால் அது அமெரிக்க மக்கள் செலுத்தும் வரியை வெகுவாக குறைக்கும்.
அதேநேரம் அமெரிக்க பெடரல் அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் கணிசமான பங்கு வருமான வரியில் இருந்து தான் வருகிறது. அப்படியிருக்கும் போது வருமான வரியை ரத்து செய்தால் வருவாய் பாதிக்கும். இதைச் சமாளிக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகள் உயர்த்த போவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
டிரம்ப் சொல்வது என்ன:
குடியரசு கட்சி எம்பிக்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய டிரம்ப், "அமெரிக்கர்களைப் பணக்காரர்களாகவும் சக்திவாய்ந்தவர்களாகவும் மாற்றிய சிஸ்டத்திற்கு நாம் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது... வெளிநாட்டு நாடுகளை வளப்படுத்த நமது மக்கள் மீது வரி விதித்தது போதும்.. இனி நமது நாட்டு மக்களை வளப்படுத்த வெளிநாட்டு இறக்குமதிகள் மீது நாம் வரி விதிக்க வேண்டும்.
1870 முதல் 1913 வரையிலான காலகட்டம் தான் நம்மைப் பணக்கார நாடாக மாற்றியது.. அமெரிக்காவை மிகவும் சக்திவாய்ந்த நாடாக மாற்றிய காலகட்டமும் அதுதான். அப்போது நாம் இறக்குமதி வரி விதித்தோம். அந்த காலகட்டத்தில் இறக்குமதி வரிகள் மூலம் அமெரிக்காவுக்கு மகத்தான வருவாய் கிடைத்தது. நமது நாட்டு மக்களுக்கு வரி விதிப்பதற்குப் பதிலாக நாம் இதைச் செய்யலாம்" என்றார்.
அமெரிக்காவில் வரி முறை- ட்விஸ்ட்:
அதாவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அதிகரிக்கப் போவதாகவும் அமெரிக்க மக்கள் மீதான வருமான வரியை ரத்து செய்யப்போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை பெடரல் அரசும் மாகாண அரசும் தனித்தனியாக வருமான வரி விதிக்கும். தெற்கு டகோட்டா, டெக்சாஸ் உள்ளிட்ட சில மாகாணங்களில் மட்டுமே தனியாக வருமான வரி இல்லை.
மற்றபடி அனைத்து மாகாண அரசுகளும் தனியாக வருமான வரி விதிக்கும். இப்படி இரு அரசுகளுக்கும் வருமான வரி செலுத்துவதே அமெரிக்க மக்களுக்கு பெரும் சுமை. இதைக் கருத்தில் கொண்டே பெடரல் அரசின் வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது பெடரல் அரசின் வருமான வரியை மட்டுமே டிரம்பால் ரத்து செய்ய முடியும். மாகாண அரசுகளின் வருமான வரி குறித்து சம்பந்தப்பட்ட மாகாண அரசுகளே முடிவெடுக்க வேண்டும்.
எச்சரிக்கை:
அதேநேரம் இது பொருளாதாரத்தில் எதிர்மறையான மாற்றங்களையும் கூட ஏற்படுத்தலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். டிரம்ப் நடவடிக்கையால் பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் இதனால் வட்டி விகிதம் குறைக்கப்படாமலேயே போகலாம் என்றும் சில பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications