17 வயது சிறுமியுடன் உல்லாசம்.. டிரம்ப் நியமித்த அட்டர்னி ஜெனரல் மேட் கேட்ஸ் யார்? அலறவைத்த அறிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரி 20ம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கிடையே தான் அவர் அட்டர்னி ஜெனரலாக மேட் கேட்ஸ் என்பவரை நியமித்தார். அவர் பாலியல் புகாரில் சிக்கிய நிலையில் அவரை பற்றிய முக்கிய அறிக்கை வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இவர் அடுத்த மாதம் பதவியேற்க உள்ளார். அதாவது 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி முதல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபராக 2வது முறையாக செயல்பட உள்ளார்.

தற்போது டொனால்ட் டிரம்ப் தனது அரசின் நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகள், நிர்வாகிகள் நியமனங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அட்டர்னி ஜெனரலாக மேட் கேட்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் குடியரசு கட்சியை சேர்ந்தவர். அதோடு டொனால்ட் டிரம்ப்பின் நம்பிக்கையை பெற்றவர்.
ஆனால் அவரது நியமனம் சர்ச்சையை கிளப்பியது. டொனால்ட் டிரம்பின் இந்த தேர்வை சொந்த கட்சியினரே எதிர்க்க தொடங்கினர். இதையடுத்து வேறு வழியின்றி மேட் கேட்ஸ் அந்த பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் தான் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நெறிமுறை கமிட்டி சார்பில் தற்போது பரபரப்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மேட் கேட்ஸ் போதைப்பொருள் வைத்திருத்தார். 2017 ம் ஆண்டில் 17 வயது சிறுமியுடன் பாலியல் உறவில் இருந்தார். அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதன்பிறகு புகாரை மறைக்க அவர் ஆயிரக்கணக்கான டாலர்களை வழங்கி உள்ளார். பெண்களுக்கு அடிக்கடி பணம் கொடுத்து தன்னுடன் உறவு வைக்க அழைத்துள்ளார். இதன்மூலம் புளோரிடா மாகாணத்தின் சட்டத்தை அவர் மீறி உள்ளதோடு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் மீறியுள்ளார் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உள்ளன.
இதுதொடர்பாக சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்ற நெறிமுறை குழு அறிக்கையில் மேட் கேட்ஸ் நாடாளுமன்ற விதிகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபசாரம், பாலியல் தொல்லை, போதைப்பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட பல வகைகளில் அவர் சட்டத்தை மீறியுள்ளார். குறிப்பாக 12 பெண்களுக்கும், அவரது முன்னாள் உதவியாளர் ஜோயல் கிரின்பெர்க்கிற்கும் பணம் அனுப்பி உள்ளார்.
குறிப்பாக கூற வேண்டும் என்றலா் 2017 முதல் 2020ம்ஆண்டுக்குள் 63 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு அவரது முன்னாள் காதலிக்கு வழங்கி உள்ளார். இதற்கான சான்றுகள் உள்ளதாக அந்த குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள மேட் கேட்ஸ் அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார். புளோரிடாவில் அவரது தாத்தா ஜெரி கேட்ஸ், தந்தை டான் கேட்ஸ் ஆகியோர் பிரபலமான அரசியல்வாதியாகும்.
அந்த வகையில் அரசியலுக்குள் நுழைந்த மேட் கேட்ஸ் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியில் செயல்பட்டு வருகிறார். 2017 முதல் 2014ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தார். டொனால்ட் டிரம்ப் அவரை அட்டார்னி ஜெனரல் பதவிக்கு நியமித்த நிலையில் மேட் கேட்ஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பாலியல் புகார் உள்ளிட்ட விவகாரங்களால் அவரது நியமனத்துக்கு சொந்த கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மேட் கேட்ஸ் அந்த பொறுப்பை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications