நாளை அதிபராக பதவியேற்கும் டிரம்ப்.. முதல் நாளில் என்னவெல்லாம் நடக்கும்! சுவாரசியமா இருக்கே
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் நாளைய தினம் பதவியேற்கிறார். இது இந்திய நேரப்படி நாளை இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது. பதவியேற்பு விழா அன்று என்னவெல்லாம் நடக்கும். யார் டிரம்பிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து டிரம்ப் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டிரம்ப் நாளை அதிபராகப் பதவியேற்கும் சூழலில், இன்றைய தினம் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன.. இன்று வர்ஜீனியாவில் உள்ள டிரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்பில் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தன.

இதில் கலந்து கொண்ட டிரம்ப், அதன் பிறகு வாஷிங்டனுக்கு சென்றார். அங்கு அவர் இன்றிரவு பேரணி மற்றும் ஆதரவாளர்களுடன் சிறப்பு டின்னர் நிகழ்விலும் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
நாளை என்ன நடக்கும்:
நாளைய தினம் தான் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் 47ஆவது அதிபராகப் பதவியேற்பார். இது உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிக்கு நடைபெறும். இந்திய நேரப்படி நாளை இரவு 10.30 மணிக்கு இது நடக்கும். அமெரிக்க சட்டப்படி ஜனவரி 20ம் தேதி நண்பகலில் இருந்து புதிய அதிபரின் பதவிக்காலம் தொடங்கும். ஒருவேளை ஜனவரி 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக வந்தால் மறுநாள் நண்பகலில் இருந்து பதவிக்காலம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் எப்போதும் புதிய அதிபருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதன்படி அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மீண்டும் டிரம்பிற்கு இரண்டாவது முறையாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கடந்த 2017ம் ஆண்டிலும் இதே ஜான் ராபர்ட்ஸ் தான் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
யாரெல்லாம் பங்கேற்பார்கள்:
அதிபராகப் பதவியேற்ற பிறகு டிரம்ப் சிறப்புரையாற்றுவார். அதில் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டத்தை விளக்குவார். இதே பதவியேற்பு விழாவில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸும் பதவியேற்பார். பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, அதிபர், அவரது மனைவி, துணை அதிபர், செனட் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேபிட்டலுக்கு செல்வார்கள். அங்குக் கூட்டுக் காங்கிரஸின் குழுவின் மதிய உணவில் பங்கேற்பார்கள்.
நிர்வாக உத்தரவுகள்:
அதன் பிறகு அதிபருக்கான ஓவல் அலுவலகத்திற்கு டிரம்ப் செல்வார். அங்கு சில நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதன் டிரம்ப் அதிகாரப்பூர்வமாகத் தனது பணியைத் தொடங்குவார். முதல் நாளே நிர்வாக உத்தரவுகள் மூலம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதாக டிரம்ப் தொடர்ந்து சொல்லி வந்தார். எனவே, முதல் நாளே அவர் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முதல் நாளில் என்ன மாதிரியான உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போகிறார் என்பதில் சஸ்பென்ஸ் தொடர்கிறது.
மேலும், அதிபராகப் பதவியேற்ற நாளில் மாலை 3 அதிகாரப்பூர்வ கலா நிகழ்ச்சிகள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் டிரம்ப் பங்கேற்கவுள்ளார். இத்துடன் டிரம்பின் பதவியேற்பு விழாவில் முதல் நாள் நிறைவடையும்.
இரண்டாவது நாள்:
தொடர்ந்து இரண்டாவது நாள் காலை 11 மணிக்கு வாஷிங்டன் நேஷனல் கதீட்ரலில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனை கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்க உள்ளார். இதில் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்புப் பிரார்த்தனை கூட்டம் பதவியேற்பு நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக நிறைவடைவதைக் குறிக்கும்.
டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். தொழிலதிபர் எலான் மஸ்க், மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்கிறார்கள். மேலும், இப்போது அதிபர் பதவியில் இருந்து விலகும் ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா உள்ளிட்டோரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications