அதிபராகும் முன்பே சிக்கல்.. சிறுமியுடன் உடலுறவு.. டிரம்ப் ஆட்சியை அமைக்கும் முன்பே வெடித்த சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றிருந்த டிரம்ப், வரும் ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்கவுள்ளார். இதற்குத் தேவையான பணிகளை அவரும் அவரது டீமும் எடுத்து வரும் நிலையில், இப்போது திடீரென ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இது ட்ரம்பிற்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், தனது நிர்வாகத்தில் இடம் பெறப்போகும் நபர்களைத் தேர்வு செய்து வருகிறார். இதற்கிடையே டிரம்ப் நிர்வாகத்திற்குத் தொடக்கத்திலேயே இப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

america donald trump

அட்டர்னி ஜெனரல்: அதாவது டிரம்ப் தனது அரசின் அட்டர்னி ஜெனரலாக மிகத் தீவிர வலதுசாரியான மேட் கேட்ஸ் என்பவரைத் தேர்வு செய்து இருந்தார். இது அங்குப் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால் மேட் கேட்ஸ மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் விசாரணையில் நிலுவையில் உள்ளது. இதனால் சொந்த கட்சியினரே கூட பலரும் அவரை எதிர்க்கத் தொடங்கினர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அதிகம். எனவே, அதிபர் என்ற முறையில் டிரம்ப் என்னதான் தனது நிர்வாகத்தில் இடம் பெறப்போகும் நபர்களைத் தேர்வு செய்தாலும் அதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும். அட்டர்னி ஜெனரலாக டிரம்ப் தேர்வு செய்திருந்த மேட் கேட்ஸுக்கு சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு இருந்ததால் அவர் வெல்வது கடினம் என்றே சொல்லப்பட்டது. இதற்கிடையே அவர் திடீரென அட்டர்னி ஜெனரலாக பொறுப்பேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

மேட் கேட்ஸ்: கடந்த வாரம் மேட் கேட்ஸை டிரம்ப் தேர்வு செய்த நிலையில், சொந்த குடியரசு கட்சியைத் தேர்ந்த பலரும் கூட அவரது கடந்த கால நடத்தை குறித்து கேள்விகளை எழுப்பினர். பாலியல் அத்துமீறல், பெண்களைக் கடத்த உடந்தையாக இருந்தது உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பாக சுமார் 3 ஆண்டுகள் அவர் மீது விசாரணை நடந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு திடீரென அந்த விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

சிறுமியுடன் உடலுறவு: இந்தச் சூழலில் தான் டிரம்ப் இவரை அட்டர்னி ஜெனராக தேர்வு செய்யவுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்தவுடனேயே அவர் 17 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்டதாக இருந்த புகார் குறித்து பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பினர். மேலும், போதைப் பொருள் பயன்பாடு, பிரச்சார நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது எனப் பல புகார்களில் அவர் விசாரணையை எதிர்கொண்டு இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தாலும் இது அங்குப் பெரிய விவாதமாக மாறியது.

எதிர்ப்பு அதிகரித்தால் வேறு வழியின்றி தனது எம்பி பதவியை அவர் கடந்த வாரம் ராஜினாமா செய்திருந்தார். இந்தச் சூழலில் தான் அட்டர்னி ஜெனரலாக பதவியேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதால் வாபஸ் பெறுவதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை: அதிபர் தேர்தலில் வென்றது முதலே டிரம்ப் பல அதிரடி நியமனங்களை அறிவித்து வருகிறார். இந்தச் சூழலில் அவர் தேர்வு செய்திருந்த ஒருவர் பாலியல் புகார் சர்ச்சை காரணமாகப் பதவியேற்க மறுத்துள்ளது டிரம்ப் நிர்வாகத்திற்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. டிரம்ப் வரும் ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்கும் நிலையில், அதற்குள் அட்டர்னி ஜெனரல் யார் என்பது குறித்து முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+