Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூமிக்கு புது நிலா.. தனியாக சுத்த தேவையில்லை! விஞ்ஞானிகளை வியக்க வைத்த சம்பவம்.. வானில் நடந்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பூமிக்கு புதிதாக ஒரு நிலா கிடைத்துள்ளதாம். அளவில் மிக மிக சிறிய இந்த விண்கல்லிற்கு 'அர்ஜுனா 2025 பிஎன்7' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பூமியை போலவே இந்த கோளும் சூரியனை சுற்றும் பாதையும், வேகமும் ஒரே மாதிரியாக இருப்பதால் பூமியை விட்டு இது வெகுதூரம் விலகி செல்லாமல் பூமியுடனயே சுற்றிக்கொண்டு இருக்கிறது.

பூமியின் மீது உண்மையான ஈர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஒரு நிலவு போல, ஒரு துணை பொருள் போல பூமியின் அருகிலேயே சுற்றி வருகிறது. வானில் நடந்த இந்த அதிசய நிகழ்வு குறித்த விவரங்களை பார்க்கலாம்.

earth-s-new-quasi-moon-discovered-scientists-name-it-arjuna-2025-pn7

பூமியின் துணைக்கோள் நிலா

நாம் வாழும் பூமியாக இருக்கட்டும்.. விண்வெளியாக இருக்கட்டும்.. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பேரதிசயங்களை கொண்டதாகும். இந்த பூமி எப்படி உருவானது? பூமியின் ஒரே துணைக்கோளாக இருக்க கூடிய சந்திரன் உருவானது எப்படி? என்பது தொடர்பாக புதுப்புது தகவல்கள் விஞ்ஞான உலகத்தால் முன்வைக்கப்படுகின்றன.

சூரிய குடும்பத்தில் மூன்றாவது இருக்கும் கோள் பூமி. சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களான புதன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்களுக்கு நிலாக்கள் இல்லை. செவ்வாய்க்கு இரண்டு நிலாக்கள் உள்ளன. சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு அடுத்து மிகப்பெரிய கோளான வியாழனுக்கு 79 நிலாக்கள் உள்ளன. விண்வெளியில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியுமா என கண்டறிய விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதிய நிலா 'குவாசி மூன்'

உலகம் முழுக்க இந்த ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில் அண்மையில், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அருகே சுற்றி வரும் புதிய நிலா ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 'குவாசி மூன்' என்று அறியப்படும் இந்த நிலாவிற்கு 'அர்ஜுனா 2025 பிஎன்7' என பெயரிடப்பட்டுள்ளது. சந்திரனுக்கு ஒரு தோழன் வந்துவிட்டால் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் நிலையில், உண்மையில் இது ஒரு நிலவு இல்லையாம்..

அதாவது சிறுகோள் என்கிறார்கள் நெட்டிசன்கள். பூமியை போலவே இதுவும் சூரியனை சுற்றி வருகிறது. இந்த இரண்டு கோள்களின் சுற்றுப்பாதையும் வேகமும் ஒரே அளவில் இருக்கிறது. இதனால், பூமியை விட்டு வெகுதூரம் விலகி செல்லாமல் பூமியை நெருங்கியே சுற்றி வருகிறதாம். புவி ஈர்ப்பு விசை காரணமாக இது பூமிக்கு அருகிலேயே சுற்றி வருகிறது.

பல ஆண்டுகளாகவே சுற்றி வருகிறது

இதனாலேயே இதனை 'குவாசி மூன்' என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதற்கான அர்த்தம் என்னவென்றால், "கிட்டத்தட்ட நிலவு" என்பதாகும். குவாசி மூன் நீண்ட காலமாக பூமியின் அருகே சுற்றி வருகிறது. இது அளவில் மிகச்சிறியது ஆகும். எந்த அளவிற்கு சிறியது என்றால் வெறும் 62 அடி அளவு மட்டுமே கொண்ட சிறிய கோளாகும்.

பல ஆண்டுகளாக இந்த சிறுகோள் பூமியின் அருகே சுற்றி வந்த போதிலும் இதுவரை கண்டறியப்படாமல் இருந்துள்ளது. தற்போதுதான் இந்தக் கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். உயர் திறன் கொண்ட அதி நவீன ஹைடெக் டெலஸ்கோப் மூலமாக இந்த சிறுகோள் சிக்கியுள்ளது. இந்த சிறுகோள் இன்னும் சில ஆண்டுகள் பூமியின் அருகிலேயே சுற்றி வரும் என்றும் அதன்பிறகு பூமியை விட்டு விலகி செல்ல வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

நிலா எப்படி உருவானது?

பூமியின் ஒரே துணைக்கோளான சந்திரன் பற்றி பல்வேறு கருத்துக்களை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பூமியும் நிலாவும் ஒன்றாக தோன்றியவை என்றும், பெரிய வாய்ப்பந்து சுழன்று திரண்ட போது நடுவில் உள்ளவை சூரியனாக மாறியதாகவும் அதனை சுற்றி வந்த பொருள்கள் பல்வேறு கோள்களாக மாற்றம் அடைந்தன.

2080 ஆம் ஆண்டு வரை இருக்கும்

அதில் ஒருபகுதியே பூமியும் நிலவுமாக மாறியது என்று சில விஞ்ஞானிகள் சொல்லும் கருத்தாக இருக்கிறது. அதேபோல, பூமியில் இருந்து உருவானதுதான் நிலா என்ற ஒருவாதமும் முன்வைக்கப்படுகிறது. அதேபோல எங்கோ இருந்து வந்த நிலாவை, பூமி அருகே வந்த போது அதை விடாமல் பூமி பிடித்து வைத்து இருப்பதாகவும் ஒரு கூற்று உள்ளது.

பூமியின் சிக்கலான சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வரும் இந்த புது நிலா, 1960களில் முதன் முதலாக வந்ததாகவும் 2080 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பூமியுடனேயே பயணிக்கும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+