No.1 பணக்காரரின் மனிதநேயம்! காசாவுக்கு ‛எக்ஸ்’ வருமானத்தை வழங்கும் எலான் மஸ்க்! அமெரிக்கா எதிர்ப்பு
வாஷிங்டன்: இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் காசாவில் உள்ள அல் ஷிஃபா உள்ளிட்ட பல மருத்துவ கட்டமைப்புகள் சேதமாகி உள்ளன. இதற்கிடையே தான் மருத்துவ உதவிக்காக எக்ஸ் வலைதள பக்கத்தின் விளம்பரம் மற்றும் மாதசந்தா சார்ந்த வருமானத்தை காசாவுக்கு வழங்க உள்ளதாக எலான் மஸ்க் பரபரப்பாக அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அதோடு இஸ்ரேலுக்கு நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். அன்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

இதையடுத்து இஸ்ரேல் காசா மீது போர் நடவடிக்கையை தொடங்கியது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கி விட்டதாக கூறி தனது நாட்டு ராணுவ விமானங்களை வைத்து காசாவில் மேல்பரப்பில் இருந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். இந்த போர் தற்போது ஒரு மாதத்தை கடந்து 2வது மாதமாக நீடித்து வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான இந்த போர் நடவடிக்கையை நிறுத்த இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தான் ஒருவழியாக நாளை முதல் 4 நாட்கள் காசா மீதான தாக்கதலை இஸ்ரேல் கைவிட முடிவு செய்துள்ளது. ஹமாஸ் பிடித்து வைத்துள்ள குழந்தைகள், பெண்கள் என 50 பிணைக்கைதிகளை நாளை விடுவிக்க கூறிய நிலையில் இஸ்ரேல் 4 நாள் தற்காலிகமாக போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இருப்பினும் கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்த மோதலில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல் காரணமாக காசாவில் பல மருத்துவமனைகள் தரைமட்டமாகி உள்ளன. காசாவில் மிகப்பெரிய மருத்துவமனையாக கருதப்படும் அல் ஷிஃபா உள்ளிட்ட மருத்துவமனைகள் சேதமாகி உள்ளன. இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்கவில்லை என கூறி வரும் நிலையில் அதனை ஹமாஸ் ஏற்க மறுக்கிறது. இந்த விஷயத்தில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே இந்த மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பு ராணுவ அமைப்புக்கான மையமாக பயன்படுத்துவதாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்ததாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு மருத்துவமனை ஊழியர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது இஸ்ரேல் தாக்குதலுக்கு நடுவே காசாவில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மின்சாரம் உள்ளிட்டவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் போரில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ கட்டமைப்புகள் இல்லாத நிலை உள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், எக்ஸ் வலைதள பக்கத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இஸ்ரேல் தொடர்ந்துள்ள போரால் பாதிக்கப்பட்ட காசா நகருக்கு உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எக்ஸ் கார்ப்பரேஷன் காசா போருடன் தொடர்புடைய விளம்பரங்கள் மற்றும் சந்தாக்கள் மூலம் அனைத்து வகையான வருவாயையும் இஸ்ரேல் தாக்குதால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு வழங்க உள்ளது. காசாவில் உள்ள மருத்துவமனைக்காக இந்த வருவாய் அங்குள்ள செஞ்சிலுவை சங்கம் மூலம் நன்கொடையாக வழங்கப்பட உள்ளது'' என்றார்.
இதனை அமெரிக்கா கண்டித்துள்ளது. யூதர்களுக்கு எதிராக எலான் மஸ்க் செயல்படுவதாக விமர்சனம் செய்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்தாலும் கூட எலான் மஸ்க் காசாவுக்கு தொடர்ந்து உதவிகளை செய்வதில் ஆர்வமாக உள்ளார். முன்னதாக கடந்த மாதம் எலான் மஸ்க், காசாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு தனது ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கை கோள் வலையமைப்பு மூலம் தொலை தொடர்பு சேவையை வழங்குவதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications