எலான் மஸ்க் அதிரடி.. ட்விட்டர் ப்ளூடிக்கிற்கு மாதம் 8 டாலர் கட்டணமாக நிர்ணயம்.. சலுகைகளும் அறிவிப்பு
வாஷிங்டன்: ட்விட்டரில் ப்ளூடிக் பயனாளர்கள் மாதம் 8 அமெரிக்க டாலரை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளார். 8 டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ.660 ஆகும்.
உலகில் மிகப்பெரும் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் ட்விட்டரில் கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என கூறியிருந்தார். அதோடு ட்விட்டர் நிறுவன பங்குகளை வாங்கினார்.

ட்விட்டரில் எலான் மஸ்க்
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் டுவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். இதன்மூலம் ட்விட்டர் நிர்வாக குழுவில் இடம்பிடித்தார். அதைத்தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அவர் அறிவிப்பு செய்தார். பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு முழு இடமளிக்கும் வகையில் ட்விட்டர் செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.

ட்விட்டர் VS எலான் மஸ்க் பிரச்சனை
இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்க்கிற்கும் போடப்பட்டது. இதற்கிடையே தான் ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்
இதையடுத்து ட்டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றம் சென்றது. ட்விட்டர் நிறுவனத்தை ஒப்பந்தப்படி வாங்கி கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி தன்வசப்படுத்தினார். இதையடுத்து ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார்.

ப்ளூ டிக் விவகாரம்
மேலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதோடு ட்விட்டரில் புதிய மாற்றங்கள் கொண்டு வரும் நடைமுறை குறித்து முக்கிய நபர்களுடன் எலான் மஸ்க் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் தான் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிப்பிடும் வகையில் ‛ப்ளூடிக்' வசதி உள்ளது. இது அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட மிகவும் பிரபலமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கட்டணம் நிர்ணயிக்க முடிவு
இதற்கிடையே தான் ப்ளூ டிக் வசதிக்கு பணம் செலுத்தும் முறை அமல்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதிகாரப்பூர்வ கணக்குக்கான ப்ளூ டிக் பெற்றவர்கள் மாதம் 20 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,600) வரை செலுத்த வேண்டி இருக்கும் என கூறப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாதம் 8 டாலர்
இந்நிலையில் தான் எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ப்ளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் சில ட்விட்டர் பதிவுகள் செய்துள்ளார். அதில், ‛‛ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஆடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதோடு விளம்பங்கள் பாதியாக குறைக்கப்படும்'' என கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications