50 பக்க பிரிண்ட் அவுட்! டாப் ட்விட்டர் ஊழியர்களுக்கு ஹோம் வோர்க் கொடுத்த எலான் மஸ்க்! அடாவடி உத்தரவு
வாஷிங்டன்: பிரபல டெக் நிறுவனமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், அவர் ஏற்கனவே அங்குப் பல அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் எதுவுமே நடக்காது என்ற சூழலே இப்போது இருக்கிறது. அரசு அறிவிப்புகள் கூட சமூக வலைத்தளங்களில் தான் இப்போது வெளிவருகிறது.
குறிப்பாக பல்வேறு பிரபலங்களின் முதல் சாய்ஸாக ட்விட்டர் தளமே இருக்கிறது. சுருங்கச் சொல்ல வேண்டும் என்பதால் உலகெங்கும் பல கோடி பேர் அதையே விரும்பி பயன்படுத்துகின்றனர்.

எலான் மஸ்க்
இருந்த போதிலும், ட்விட்டரின் வருவாய் பெரியளவில் அதிகரிக்கவில்லை. பிற டெக் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை அடைந்த போதிலும், ட்விட்டருக்கு வருமானம் அதிகரிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டர் பங்கு பெரியளவில் உயரவில்லை. இந்தச் சூழலில் தான் ட்விட்டர் பங்குகளை வாங்க எலான் மஸ்க் ஆர்வம் காட்டினார். முதலில் வாங்குவதாக அறிவித்துவிட்டு, பின் பின்வாங்கினார்.

ட்விட்டர்
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் எச்சரித்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு முழுமையாக ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை முற்றிலுமாக மாற்ற எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஏற்கனவே அவர் பராக் அகர்வால் உள்ளிட்ட டாப் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்துள்ளார். எலான் மஸ்க் கைகளுக்கு ட்விட்டர் வந்த நாளன்றே பராக் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

அடாவடி
பொதுவாக மஸ்க் தனது ஊழியர்களை மதிக்க மாட்டார். முறையாக நடத்த மாட்டார் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் முன்னாள் ஊழியர்கள் இதை வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இதனிடையே ட்விட்டரிலும் அவர் இதே மாதிரியான அடாவடி நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே, மஸ்க் கைகளில் ட்விட்டர் சென்றால் என்ன ஆகுமோ என்ற நினைத்த ஊழியர்களுக்கு இது அதிர்ச்சியைத் தருவதாகவே உள்ளது.

50 பக்கங்கள் பிரிண்ட் அவுட்
அதாவது ட்விட்டர் ஊழியர்களுக்கு கோடிங் தெரியுமா என டெஸ்ட் வைத்து உள்ளார். ட்விட்டரின் பிராடக்ட் ஊழியர்கள் அனைவரையும் தாங்கள் சமீபத்தில் கோடிங் போட்ட பிரோகிராமை 50 பக்கத்திற்கு பிரிண்ட் அவட் எடுத்து வர சொல்லி இருக்கிறார். அதை எலான் மஸ்க் சரிபார்ப்பாராம். இதை எலான் மஸ்க் அவராகச் சரி பார்க்க மாட்டார். ஏனென்றால் அவருக்கு கோடிங் அந்தளவுக்குத் தெரியாது.

செக் செய்ய டெஸ்லா ஊழியர்கள்
இதற்காகத் தனது மற்றொரு நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தில் இருந்து பொறியாளர்களை ட்விட்டர் தலைமை அலுவலகத்திற்கும் வரச் சொல்லியுள்ளார். இவர்கள் தரும் கோடிங் பக்கங்களை டெஸ்லா ஊழியர்கள் செக் செய்து சரி பார்ப்பார்களாம். இது குறித்து ப்ளூபெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. அதேபோல ட்விட்டர் ஊழியர்கள் சிலரும் இதன் படங்களைப் பகிர்ந்து உள்ளனர்.

திட்டம் என்ன
எளான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் மிகப் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையைச் செய்ய உள்ளார். வேலை செய்யாமல் இருப்பவர்களைக் கண்டறியவே அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 3 முதல் 6 மாதங்களில் ஊழியர்களைச் செய்த கோடிங்கையே மஸ்க் கேட்டுள்ளார். அதேநேரம் கோடிங்கை யாரும் செக் செய்யவில்லை என்றும் ஊழியர்கள் பிரிண்ட் எடுத்து வந்த பின்னர் அதைக் கிழித்துப் போடச் சொன்னதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications