“நன்றி கெட்டவர்! டிரம்பை பதவி நீக்க வேண்டும்” வார்த்தையை விட்ட எலான் மஸ்க்! என்ன பிரச்சனை?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், பிரபல தொழிலதிபர் எலான் மஸ்குக்கும் இடையேயான மோதல் உச்சத்தை தொட்டிருக்கிறது. டிரம்ப் நன்றி கெட்டவர் என்றும், நான் இல்லாமல் அவரால் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மட்டுமல்லாது டிரம்ப்பை அதிபர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு துணை அதிபராக இருக்கும் ஜே.டி.வான்ஸை புதிய அதிபராக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு பக்கபலமாக இருந்தது, எலான் மஸ்க்தான். நிதியுதவி தொடங்கி பல்வேறு விஷயங்களில் டிரம்புக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் இப்போது இருவருக்கும் இடையில் முட்டல் மோதல்கள் அதிகரித்துள்ளன.

காரணம் என்ன?:
டிரம்ப் தலைமையில் அமெரிக்காவில் புதிய வரி குறைப்பு மசோதா ஒன்று செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது செலவை அதிகரிக்கும் என்றும், இப்படியான மசோதா முட்டாள்தனமானது, அருவருக்கத்தக்கது என்றும் எலான் மஸ்க் விமர்சித்திருந்தார். ஏனெனில், செலவுகளை கட்டுப்படுத்ததான் 'செயல்திறன் மேம்பாட்டு துறை(டிஓஜிஇ)' என்று ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு தலைவராக மஸ்க் நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது தலைவர் பொறுப்பில் அவர் இல்லை என்பது தனிக்கதை.
ஆனால், என்னை செலவுகளை கட்டுப்படுத்த சொல்லிட்டு, வரிக்குறைப்பு மசோதாவை தாக்கல் செய்கிறீர்களே! இது நியாயமா? என்பதுதான் மஸ்க்கின் கேள்வியாக இருக்கிறது.
டிரம்ப்பின் பதிலும், பஞ்சாயத்தும்:
கேள்வி நியாயமானதுதான். ஆனால், இதற்கு பதிலளித்த டிரம்ப், "இந்த மசோதா குறித்து இன்ச் பை, இன்ச் எலான் மஸ்க்குக்குதான் தெரியும். அவரே இப்படி புரியாமல் பேசுவது ஏமாற்றமாக இருக்கிறது. மஸ்க்கும் நானும் நல்ல உறவைப் பேணி வந்தோம். இப்போது இது தொடருமா என்று தெரியவில்லை. அவர் மீது நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இந்த மசோதாவின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் அறிந்திருந்தார். அவரை விட வேறு யாருக்கும் எதுவும் தெரியாது. அவர் பதவியில் இருந்து விலகும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை.
அவர் என்னைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைச் சொன்னார். தனிப்பட்ட முறையில் எதுவும் மோசமாகச் சொல்லவில்லை. ஆனால் அதுவும் நடக்கும் என்று நினைக்கிறேன். எலானுக்கு நான் நிறைய உதவி செய்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
மஸ்க்கின் மறுப்பும், டிரம்ப்பின் கோபமும்:
இவை அனைத்தையும் எலான் மஸ்க் அப்படியே மறுத்திருக்கிறார். "பொய், இந்த மசோதா எனக்கு ஒருமுறை கூட காட்டப்படவில்லை. சென்ட் அவையில் உள்ள யாருமே படிக்க முடியாத அளவுக்கு வேகமாக நிறைவேற்றப்பட்டது. நான் மட்டும் இல்லையென்றால் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார். இவ்வளவு நன்றி மறந்திருக்கக் கூடாது" என்று காட்டமாக பேச, டிரம்பிடமிருந்து பதிலடி வேறு மாதிரியாக வந்தது.
சிக்கலில் அமெரிக்க விண்வெளித்துறை:
அதாவது, எலான் மஸ்க்கின் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அரசு மானியங்களையும், நிதி உதவியையும் வழங்கி வருகிறது. இதை குறைத்தாலே பாதி செலவு குறைந்துவிடும் என்று கூற, பதிலுக்கு மஸ்க், "நிதியை நிறுத்தினால் விண்வெளியில் உள்ள உங்கள் வீரர்களை நீங்களே பூமிக்கு அழைத்துக்கொள்ளுங்கள். நான் டிராகன் விண்கலத்தை செயல்படுத்துவதாக இல்லை" என்று கூறிவிட்டார். இதனால் நாசாவும், அமெரிக்க விண்வெளி துறையும் சிக்கலில் இருக்கிறது.
டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்:
மட்டுமல்லாது, டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், அவருக்குப் பதிலாக ஜே.டி. வான்ஸ் ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் மஸ்க் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த மோதல் காரணமாக நேற்று, டெஸ்லா பங்குகள் 14 சதவீதம் வரை சரிந்தன. இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் 152 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டத. இந்த வீழ்ச்சியால் மஸ்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 8.73 பில்லியன் டாலர்கள் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications