போதை பொருளை பயன்படுத்திய எலான் மஸ்க்? அதிபர் டிரம்ப் இருக்கும்போதே அவர் சொன்ன வார்த்தை! பரபரப்பு
வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகத்தில் டாஜ் எனப்படும் அரசு செயல்திறன் பிரிவுக்கு எலான் மஸ்க் கடந்த 4 மாதங்களாகத் தலைவராக இருந்தார். இதற்கிடையே அவர் பதவியில் இருந்த போது அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் பிரபல அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இது அமெரிக்காவில் மிகப் பெரியளவு பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாக அவர் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
கடந்தாண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றிருந்தார். அவரது வெற்றிக்கு எலான் மஸ்கின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. டிரம்பிற்கு வெறுமன ஆதரவு மட்டும் தராமல் இறங்கி பிரச்சாரம் செய்தார். ஊர் ஊராகச் சென்று எலான் மஸ்க் பிரச்சாரம் செய்த நிலையில், அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

எலான் மஸ்க்
இதனால் அதிபராக வென்ற உடனேயே எலான் மஸ்க்கை தனது நிர்வாகத்தில் டிரம்ப் சேர்த்துக் கொண்டார். அவருக்கு டாஜ் எனப்படும் அரசு செயல்திறனை அதிகரிக்கும் பிரிவின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக எலான் மஸ்க் இந்த பணிகளையே கவனித்து வந்தார். அரசு செலவுகளைக் குறைப்பதாகச் சொல்லி அவர் பெடரல் ஊழியர்களை வேலையை விட்டும் நீக்கினார். அரசுத் திட்டங்களுக்குத் தடையும் போட்டார். இது அமெரிக்கர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம் அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்க் இருப்பதால் இது அவரது பிஸ்னஸையும் கடுமையாகப் பாதித்தது. டெஸ்லா கார் விற்பனை சரிந்த நிலையில், எக்ஸ் தளமும் அவ்வப்போது முடங்கியது. இதையடுத்து அரசு நிர்வாகத்தில் இருந்து விலகி எலான் மஸ்க் மீண்டும் தனது பிஸ்னஸ்களை கவனிக்க உள்ளதாக அறிவித்தார். நேற்றைய தினம் தான் இது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார்.
போதைப் பொருள்?
தொடர்ந்து அவர் அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்தார். அங்கு வெள்ளை மாளிகையில் அப்போது இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எலான் மஸ்க் பிரபல அமெரிக்கச் செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் தன்னை பற்றி வெளியிட்டிருந்த செய்திக்கு கடும் அதிருப்தி தெரிவித்தார். அதாவது எலான் மஸ்க் டாஜ் துறையில் இருந்த போது அவர் போதைப் பொருளை அடிக்கடி உட்கொண்டதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எலான் மஸ்க் அந்த செய்திகளை மறுத்துள்ளார்.
அவரே சொன்ன தகவல்
இருப்பினும், அவர் கடந்த மார்ச் 2024இல் அளித்த பேட்டி ஒன்றால் கெட்டமைனை என்ற மருந்தை எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை சிறியளவில் இந்த மருந்தை எடுத்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். கெட்டமைனை என்பது தடை செய்யப்பட்ட மருந்து இல்லை என்றாலும் அது கிட்டதட்ட போதை மருந்து போன்றது தான்.. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இதை எடுத்துக் கொள்ள முடியாது.
எலான் மஸ்க் குறித்த பகீர் தகவல்
அதேநேரம் எலான் மஸ்க் உடன் வேலை செய்வோர் அவர் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமில்லாமல்.. அதிகளவில் கெட்டமைன் எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டனர். குறிப்பாகக் கடந்தாண்டு தேர்தல் பிரச்சாரம் சமயத்தில் அவர் அளவுக்கு அதிகமாகவே கெட்டமைன் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எலான் மஸ்கின் மருந்து பெட்டியில் 20 கெட்டமைன் மாத்திரைகள் வரை இருந்ததாகவும் கூட செய்தியி்ல குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் அவர் அதிபர் டிரம்ப் இருக்கும்போதே இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications