கொஞ்சம் ஓவராகத்தான் போயிட்டேன்.. டிரம்ப் மிரட்டலுக்கு பணிந்த எலான் மஸ்க்? திடீரென போட்ட யூ டர்ன்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கு டிரம்பும் பதிலடி கொடுத்ததால் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சத்தை தொட்டது. இதற்கிடையே, தற்போது டிரம்புக்கு எதிராக கூறிய கருத்துக்களுக்கு எலான் மஸ்க் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்தது மட்டும் இன்றி அவருக்காக பெருமளவு நிதி உதவியையும் அளித்தவர் எலான் மஸ்க். இதற்கு நன்றி கடனாக , டிரம்ப் வெற்றி பெற்றதும், தனது நிர்வாகத்தில் செலவின கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர் பொறுப்பை எலான் மஸ்க்கிற்கு ஒப்படைத்தார்.

elon-musk-expresses-regret-over-social-media-posts-about-donald-trump-after-fallout

முஸ்தபா.. முஸ்தபா பாட்டு ரேஞ்சுக்கு

முஸ்தபா.. முஸ்தபா பாட்டு ரேஞ்சுக்கு டிரம்ப், எலான் மஸ்க்கும் நெருங்கிய நட்புறவை கொண்டு வந்தனர். டிரம்பின் வலது கரம் போல செயல்பட்ட எலான் மஸ்க், அரசு நிர்வாகத்தில் தேவையற்ற செலவுகளை குறைப்பதாக கூறி, பெடரல் ஊழியர்கள் பலரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தார். இதனால், எலான் மஸ்க்கிற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன.

இதற்கிடையே, அண்மையில் பிக் பியூட்டிபுல் மசோதா ஒன்றை டிரம்ப் அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான வரி சலுகை நீக்கம் உள்ளிட்டவை இடம் பெற்று இருந்ததால் டென்ஷன் ஆன எலான் மஸ்க், டிரம்பிற்கு எதிராக கொந்தளித்தார். தனது பொறுப்பில் இருந்து விலகிய கையோடு, டிரம்பை கடுமையாக விமர்சித்தார்.

வரம்பு மீறி சென்றுவிட்டேன்

டிரம்பை வெற்றி பெற பெரிய தவறு செய்துவிட்டேன் எனவும் புதிய கட்சியை தொடங்க போவதாகவும் எலான் மஸ்க் கூறினார். சிறுமிகளுக்கான எதிரான பாலியல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரத்தில், டிரம்ப் பெயர் இடம் பெற்று இருப்பதாகவும் பெரிய குண்டை வீசினார். எலான் மஸ்க் - டிரம்ப் மோதல் அமெரிக்காவில் மட்டும் இன்றி சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் ஒன்றாக மாறியது.

ஆனால் கடந்த சில நாட்களாக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறிய எலான் மஸ்க், டிரம்புக்கு எதிரான சில கருத்துகளை தனது எக்ஸ் பதிவில் இருந்து அழித்தார். அதேபோல, தற்போது எலான் மஸ்க் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து இருப்பதாகவும் கூறினர். இது தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்க கூடிய பதிவில், 'கடந்த வாரம் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து வெளியிட்ட சில பதிவுகளுக்கு வருந்துகிறேன். வரம்பு மீறி சென்றுவிட்டதை உணர்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்பே இதைச் செய்திருக்க வேண்டும்

முன்னதாக எலான் மஸ்க்கின் விமர்சனங்களுக்கு டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்து இருந்தார். டிரம்ப் கூறுகையில், "எலான் எனக்கு எதிராகத் திரும்புவதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் சில மாதங்களுக்கு முன்பே இதைச் செய்திருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார். மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பே மஸ்கிற்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரியும் என்பதை இது உணர்த்துகிறது.

மேலும், எலான் மஸ்கின் நிறுவனத்துடனான அரசாங்க ஒப்பந்தங்களையும் நிறுத்தப் போவதாக அவர் மிரட்டல் விடுத்து இருந்தார். டிரம்ப்பின் இந்த மிரட்டல் போன்றவற்றால் தனது தொழில் நிறுவனங்கள் சிரமங்கள் எதிர்கொள்ளும் என்பதை உணர்ந்து எலான் மஸ்க் தனது நிலைப்பட்டில் இருந்து பின் வாங்கியிருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+