ட்விஸ்ட்! இதையும் விட்டு வைக்கவில்லை.. ட்விட்டரில் கை வைத்த எலான் மஸ்க்.. 7.34 கோடி பங்குகள் வசமாகின
வாஷிங்டன் : ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவன தலைவரும் மிகப்பெரிய கோடீஸ்வரருமான மஸ்க் புதிய சமூக வலைதளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகிய நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளார்.
Recommended Video
உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் விண்வெளி ஆராய்ச்சியில் தனது பார்வையைத் திருப்பியுள்ளார்.
ஸ்டார்லிங் மூலம் இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் ஆராய்ச்சியில் அவர் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

எலான் மஸ்க் அதிரடி
தொழில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருப்பவர் எலான் மஸ்க். தன்னை டேக் செய்து கேள்வி கேட்பவர்களிடம் சளைக்காமல் பதில் அளிக்கும் எலான், உக்ரைன் விவகாரத்தில் புடினை நேருக்கு நேர் எதிர்த்தார். ரஷ்யா - உக்ரைன் போரிலும் தீவிரமாக தனது கருத்துகளை தெரிவித்த எலான் மஸ்க் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதினை நேருக்கு நேர் சந்திக்க தயார் என ஒற்றைப் போருக்கான சவாலை விடுக்கிறேன் என்று பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

மோதல் போக்கு
குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு இணைய சேவைகளையு வழங்கினாட் எலான். இப்படி தினந்தோறும் ஹாட் டாப்பிக்காக வலம் வரும் எலான் மஸ்க் ட்விட்டருடன் மோதல் போக்கை கொண்டு வருகிறார். ட்விட்டர் பயனர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கவில்லை எனவும், தனியுரிமை என்ற பெயரில் கருத்துரிமையை பாதிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கான கடந்த சில நாட்களுக்கும் முன்னர் ஒரு வாக்கெடுப்பை நடத்தினார் எலான்.

எலானின் கருத்துக் கணிப்பு
கடந்த மாதம் 25ஆம் தேதி ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்திய எலான், "ஜனநாயகம் செயலாற்ற பேச்சு சுதந்திரம் தேவை. ட்விட்டர் இந்தக் கொள்கையை கடைப்பிடிக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா" என கேள்வி கேட்டார். இந்த கேள்விக்கும் சுமார் 70 பேர் இல்லை என வாக்களித்த நிலையில், எலான் மஸ்க் புதிய சமூக வலைதளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளாரா என பலரும் கேட்டனர். இதற்கு "இது குறித்து நான் தீவிரமாக பரிசீலித்து வருகிறேன்:" என்று எலான் மஸ்க் பதிலளிக்க பரபரப்பு பற்றிக் கொண்டது.

ட்விட்டர் பங்குகள்
இந்நிலையில் தான், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லாவையடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார். அதாவது ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையத்திடம் எலான் மஸ்க் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சுமார் 73.5 மில்லியன் ட்விட்டர் பங்குகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் எலான் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக மாறியுள்ளார். இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் சுமார் 26 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
-
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
"Grok AI வைத்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா.." நீதிமன்ற வழக்கில் அம்பலமான உண்மை.. பகீர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications