நான் இல்லன்னா ஜெயிச்சிருக்க முடியுமா? நன்றி கெட்டவர்! டிரம்பை விளாசிய மஸ்க்! பரபரக்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்புக்கும் எலான் மஸ்க்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது. டிரம்ப் நன்றி மறந்தவர் என்றும், நான் இல்லையென்றால் டிரம்ப்பால் வெற்றி பெற்றிருக்க முடியாது என நேரடியாகவே பேசியுள்ளார் எலான் மஸ்க். டிரம்ப் தேர்தல் வெற்றிக்காக பெரும் பணம் செலவு செய்தவர் எலான் மஸ்க். நெருக்கமான நண்பர்களாக இருந்த எலான் மஸ்கிற்கும் டிரம்பும் எலியும் பூனையுமாக மாறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் கொண்டு வந்த வரி மற்றும் செலவின மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக எதிர்த்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

elon-musk-hits-back-at-trump-calls-out-ingratitude-over-election-win

புதிதாக கொண்டு வந்த மசோதா

டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். டிரம்ப் தனது முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை பெற மஸ்க்கை அணுகுவார். கடந்த ஒன்பது மாதங்களாக அவர்கள் நல்லுறவைப் பேணி வந்தனர். தற்போது அவர்கள் ஒருவரையொருவர் பொதுவெளியில் விமர்சிக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இதற்கு காரனம் புதிதாக கொண்டு வந்த மசோதாவில் மின்சார வாகனங்கள் கட்டாயம் இல்லை என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது. இந்த மசோதா நிறைவேறிய சிறிது நேரத்தில் எலான் மஸ்க்கின் டெஸ்லா பங்குகள் 8 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. மின்சார வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த வரி சலுகையை டிரம்பின் புதிய பிக் பியூட்டில் மசோதா ரத்து செய்து இருக்கிறது.

கோபம் அடைந்த எலான் மஸ்க்

இதனால் கோபம் அடைந்த எலான் மஸ்க், புதிய மசோதாவை அருவருப்பானது என்று சாடினார். இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், "எலான் மற்றும் நான் நல்ல நண்பர்களாக இருந்தோம். இனிமேல் இருப்போமா என்று தெரியவில்லை" என்று குறிப்பிட்டார். மேலும், "அந்த மசோதாவை ரத்து செய்யுங்கள்" என்று மஸ்க் கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப் மேலும் கூறுகையில், "எலான் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்" என்றார். குடியரசுக் கட்சியினர் நிறைவேற்றிய 'ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிச் சலுகைகள் கொண்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு சில குடியரசுக் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில், 215- 214 என்ற குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

நன்றி மறந்தவர் டிரம்ப்

எலான் மஸ்க்கை டிரம்ப் விமர்சித்து இருந்த நிலையில், இதற்கு பதிலடியை எலான் மஸ்க் கொடுத்து இருக்கிறார். எலான் மஸ்க் கூறுகையில், "டொனால்டு டிரம்ப் "நன்றி மறந்தவர்" என்று சாடினார். டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற தான் மில்லியன் கணக்கான டாலர்களைச் செலவு செய்ததாகவும் மஸ்க் கூறினார். நான் இல்லையென்றால் டிரம்பால் வெற்றி பெற்றிருக்க முடியுமா? என்றும் காட்டமாக கேட்டுள்ளார்.

டொனால்டு டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான உறவு முறிந்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் செல்வாக்கு மிக்க ஒருவரும், உலகின் பெரும் பணக்காரரும் தற்போது மோதிக் கொள்வது அமெரிக்கா மட்டும் இன்றி சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+