ஜனநாயகத்தின் அடிதளமே கருத்து சுதந்திரம்தான்! ட்விட்டரை வாங்கிய கையோடு முதல் ட்வீட் போட்ட எலான் மஸ்க்
வாஷிங்டன்: ஜனநாயகத்தின் அடிதளமே கருத்து சுதந்திரம்தான். மனித குலத்தின் எதிர்காலம் பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்படுவது இந்த ட்விட்டரில்தான் என எலான் மஸ்க் தனது முதல் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வாங்கினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் பயனர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கவில்லை என்றும் 280 எழுத்துகள் போதாது என்றும் தனியுரிமை என்ற பெயரில் கருத்துரிமையை பாதிக்கிறது என்றும் எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார்.

ட்விட்டர் நிறுவனம்
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். சுமார் 73.5 மில்லியன் ட்விட்டர் பங்குகளை வாங்கியதால் ட்விட்டரில் மிகப் பெரிய பங்குதாரராக மாறினார். எனினும் ட்விட்டரின் முழு பங்குகளையும் வாங்கி அதை முழுமையாக கைப்பற்றுவதாக தெரிவித்திருந்தார்.

43 பில்லியன் டாலர்
மேலும் ட்விட்டரை 43 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த நிலையில் ஒரு பங்கு 54.20 டாலர் என்ற கணக்கில் 44 பில்லியன் டாலருக்கு (ரூ 3.31 லட்சம் கோடி ) ட்விட்டரை வாங்கியுள்ளார்.

எலான் மஸ்க்
ட்விட்டரை முழுமையாக வாங்கிய எலான் மஸ்க் முதல் ட்வீட்டில் கூறுகையில் ஜனநாயகத்தின் அடிதளமே கருத்து சுதந்திரம்தான். மனித குலத்தின் எதிர்காலம் பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்படுவது இந்த ட்விட்டரில்தான். புதிய அம்சங்களுடன் தயாரிப்பை மேம்படுத்துவதன் மூலமும் நம்பிக்கையை அதிகரிக்க விரும்புகிறேன்.
Recommended Video

கருத்து சுதந்திரம்
மேலும் அனைவரும் அங்கீகரிப்பதன் மூலம் ட்விட்டரை முன்னெப்போதையும் விட சிறப்பானதாக்க விரும்புகிறேன். தேவையற்ற பாட்களை நீக்கி மேம்படுத்தவுள்ளேன். ட்விட்டர் என்பது அளப்பறிய ஆற்றலை கொண்டது என்றார் அவர். கருத்து சுதந்திரத்திற்காக மட்டுமே இந்த ட்விட்டரை தான் விலைக்கு வாங்கியதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications