ட்விட்டரின் புதிய சிஇஓ.. போட்டோ வெளியிட்ட எலான் மஸ்க்.. ‘ஸ்டைலா.. கெத்தா’.. யார் இந்த ஃப்ளோக்கி?

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவை எலான் மஸ்க் அறிமுகப்படுத்திள்ளார்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன் : ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ என்று ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அதன் உரிமையாளரான எலான் மஸ்க். சி.இ.ஓ ஒன்று அச்சிடப்பட்டுள்ள டி-ஷர்ட்டுடன் அந்த புகைப்படத்தில் இருப்பது எலான் மஸ்க்கின் வளர்ப்பு நாய் ஃப்ளோக்கி.

ட்விட்டரில் நையாண்டியாக பதிவிடும் எலான் மஸ்க், ட்விட்டரையே வாங்கிய பிறகு மட்டும் சும்மா இருப்பாரா? நாள்தோறும் ட்விட்டரையே 'கன்டென்ட்' ஆக்கி காமெடிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்.

அந்தவகையில், ட்விட்டரின் புதிய சி.இ.ஓ என தனது வளர்ப்பு நாயின் படத்தை வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

உலகின் முன்னணி பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளருமான எலான் மஸ்க், பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை வாங்கியதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ட்விட்டரை வாங்கிய அன்றே அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வாலை அதிரடியாக நீக்கினார். மேலும், ட்விட்டரின் வருவாயை உயர்த்துவதற்காக 'ப்ளூ டிக்' வழங்க கட்டணம் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ட்விட்டர் சி.இ.ஓ

ட்விட்டர் சி.இ.ஓ

பராக் அகர்வாலை சி.இ.ஓ பதவியில் இருந்து நீக்கிய நிலையில், புதிய தலைமை செயல் அதிகாரியை தேடும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார். துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிய எலான் மஸ்க் இந்த ஆண்டு இறுதிக்குள் ட்விட்டர் சிஇஓவை அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.

 புதிய சி.இ.ஓ

புதிய சி.இ.ஓ

இந்நிலையில், ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரி எனக் கூறி ட்விட்டரில் ஒருவரை அறிமுகப்படுத்தி உள்ளார் எலான் மஸ்க். எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய ட்விட்டர் சி.இ.ஓ ஒரு மனிதரல்ல. எலான் மஸ்க்கின் வளர்ப்பு நாயான ஃபிளோக்கியைத்தான் ட்விட்டரின் புதிய சி.இ.ஓ என எலான் மஸ்க் அனைவருக்கும் கிண்டலாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஃப்ளோகி

ஃப்ளோகி

எலான் மஸ்க் தனது செல்ல நாய், ட்விட்டர் சிஇஓ நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில், ஃப்ளோகி ட்விட்டர் பிராண்டட் கருப்பு டி-ஷர்ட் அணிவிக்கப்பட்டு, அதில் CEO என எழுதப்பட்டுள்ளது. அதன் கால் பாத ரேகை வைக்கப்பட்ட, இரண்டு ஆவணங்கள் மேஜையில் உள்ளன. மேலும், ஃப்ளோகி நாயின் முன் ட்விட்டர் லோகோவுடன் சிறிய லேப்டாப் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

மறைமுக சீண்டல்

மறைமுக சீண்டல்

இந்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்த எலான் மஸ்க், "ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி அற்புதமானவர்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில், ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி "மற்ற" நபரை விட மிகவும் சிறந்தவர் என்று மறைமுகமாக முன்னாள் சிஇஓ பராக் அகர்வாலை விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+