மகன் செய்த சேட்டை! முகத்தில் காயத்துடன் வந்த எலான் மஸ்க்.. டிரம்ப் கொடுத்த ரியாக்ஷன்
வாஷிங்டன்: அமெரிக்காவின் செயல்திறன் நிர்வாக துறை தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய எலான் மஸ்க், வெள்ளை மாளிகையில் தனது ஃபேர்வேல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது எலான் மஸ்க்கின் கண் அருகே கருப்பாக லேசான காயம் இருந்தது. இது குறித்து எலான் மஸ்க்கிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு தனது மகன் முகத்தில் குத்திவிட்டதாக சிரித்தபடி கூறினார்.
உலக பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், அமெரிக்கா அரசின் செயல் திறன் நிர்வாகத்துறை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிரம்பிற்கு அதிபர் தேர்தலின் போது எலான் மஸ்க் முழு ஆதரவு அளித்தார். நிதி உதவி, பிரசாரம் என சகல வசதிகளும் டிரம்ப் மேற்கோண்ட நிலையில், டிரம்ப் பதவியேற்றதும் எலான் மஸ்க்கிற்கு இந்த பொறுப்பை கொடுத்தார்.

டொனால்டு டிரம்ப் - எலான் மஸ்க்
அவருக்கு டாஜ் எனப்படும் அரசு செயல்திறனை அதிகரிக்கும் பிரிவின் தலைவர் பதவியில், கடந்த 4 மாதங்களாக எலான் மஸ்க் பணியாற்றினார். எலான் மஸ்க் அரசு செலவுகளைக் குறைப்பதாக கூறி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அதாவது, அமெரிக்காவின் பெடரல் ஊழியர்களை வேலையை விட்டும் நீக்கினார்.
கன்னத்தில் என்ன காயம்
பல அரசுத் திட்டங்களுக்குத் தடையும் போட்டார். எலான் மஸ்க்கின் இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்கர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது ஒருபக்கம் இருக்க தனது தொழிலும் பாதிப்பை எதிர்கொள்ள ஆரம்பித்தது. டெஸ்லா கார்களுக்கு சீனாவின் பி ஒய்டி கார் கடும் சவால் அளித்தது. இதுபோன்ற நெருக்கடிகளால் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை நேற்று முன் தினமே எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துவிட்டார். இந்த நிலையில், இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு எலான் மஸ்க் பதிலளித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் எலான் மஸ்க்கின் கண்களை ஒட்டி கருப்பாக இருந்தை கவனித்து அது குறித்து கேள்வி எழுப்பினார்
மகன் குத்திவிட்டதாக
முன்னதாக அவரது முகத்தில் இருந்த இந்த காயம் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது. இத்தகைய சூழலில் எலான் மஸ்க் சுவாரசியமான தகவலை பகிர்ந்தார். அதாவது, தனது நான்கு வயது மகன் லில் எக்ஸ் உடன் விளையாடிக்கொண்டு இருந்ததாகவும் கன்னத்தில் அடித்துவிளையாடிய போது இந்த காயம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறினார்.
சிரித்தபடி கவனித்த டிரம்ப்
எலான் மஸ்க் கூறியதாவது:- "நான் பிரான்ஸ்க்கு அருகில் எங்கும் செல்லவில்லை. எனது மகனுடன் ஜாலியாக விளையாடிக்கொண்டு இருந்தேன். எனது முகத்தில் குத்துமாறு கூறினேன். அவன் குத்திவிட்டான்" என்றார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை அவரது மனைவி, விமானத்தில் வைத்து முகத்தில் அடித்ததை குறிப்பிடும் வகையில், பிரான்சை மேற்கோள் காட்டி எலான் மஸ்க் பேசினார். எலான் மஸ்க் இவ்வாறு பேசும் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அருகில் அமர்ந்துகொண்டு லேசாக சிரித்தபடி உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications