ரோபோவுக்கு "நறுக்" முத்தம்.. எலான் மஸ்க் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. என்ன மேட்டர் தெரியுமா
வாஷிங்டன்: பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ரோபோக்களை முத்தமிடும் படங்களை இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அது குறித்துப் பார்க்கலாம்.
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், போரிங் கம்பெனி என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தான் ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கியிருந்தார்.

எலான் மஸ்க் தனது அதிரடி கருத்துகள், அடாவடி நடவடிக்கைகள் மூலம் இணையத்தில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். அதேபோல தான் இப்போது மற்றொரு காரியத்தைச் செய்து அவர் கவனம் ஈர்த்துள்ளார்,
ஏஐ கருவிகள்: எலான் மஸ்க் தனது நிறுவனங்கள் மூலம் மூளையில் சிப் வைப்பது குறித்து எல்லாம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இருப்பினும், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்து அவர் எச்சரிக்கும் கருத்துகளையே கூறி வருகிறார். ஏஐ கருவிகளால் ஆபத்து ஏற்படும் என்று கூறும் அவர், குறைந்தது 6 மாதங்களுக்கு ஏஐ சோதனைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கூட வலியுறுத்துகிறார்.
ஏனென்றால் ஏஐ கருவிகள் மூலம் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். டிரம்ப், எலான் மஸ்க், ஒபாமா ஆகியோரை வைத்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பல போலியான இமேஜ்களை நாம் பார்த்துள்ளோம். இவை பார்க்க அப்படியே உண்மையான படங்களைப் போல இருப்பது தான் இதில் இருக்கும் பெரிய பிரச்சினை.

முத்தம்: இதற்கிடையே எலான் மஸ்க் சமீபத்தில் சில பெண் ரோபோக்களை, ஆம் பெண்கள் இல்லை பெண் ரோபோக்கள் தான், முத்தமிடுவது போன்ற படம் வெளியானது. டேனியல் மார்வன் என்பவர் தனது ட்விட்டரில் மஸ்க் முத்தமிடும் இந்த படங்களைப் பகிர்ந்துள்ளார். உலகின் டாப் பணக்காரர் பெண் ரோபோக்களை முத்தமிடுவது போல அது இருக்கிறது.
மேலும், டேனியல் தனது ட்விட்டரில், "எலான் மஸ்க் தனது வருங்கால மனைவியை அறிவிக்கிறாரா என்ன.. எலான் மஸ்க் தனது மனைவிக்கு என்ன மாதிரியான ஆளுமை மற்றும் குணங்கள் இருக்க வேண்டும் என நினைத்தாரோ.. அதை வைத்து ஏஐ உடன் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ இது... இது எந்த ஒரு சாதாரண மனிதனிடமும் இருக்காது.
இந்த ரோபோ Catnilla சூரிய சக்தியில் வேலை செய்யும். இதற்கு தனியாக சார்ஜ் எல்லாம் செய்யத் தேவையில்லை.. சோகமாகவும் மகிழ்ச்சியாகவும் உணரக்கூடிய சென்சார்களை இது கொண்டுள்ளது. இது ரோபோவாக மட்டுமின்றி உணர்ச்சிகளையும் கொண்டிருக்கும். இதன் மூலம் தன்னை சுற்றி இருக்கும் உணர்வுகளை அதனால் புரிந்து கொள்ள முடியும்.. இது ஏஐ மூலம் நாம் எவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைக் காட்டுகிறது.

உண்மை இல்லை: குறிப்பாக டெஸ்லா நிறுவனம் இப்போது "ஆப்டிமஸ்" என்ற ரோபோவை உருவாக்கும் நிலையில், நாம் மோசமான ஆபத்தில் இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல வித கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இருப்பினும், இது ஒன்றும் உண்மையான படங்கள் இல்லை. இவை "ஆப்டிமஸ்" ரோபோவின் படங்களும் இல்லை. இவை ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்கள். ஆனால், இதைப் பார்க்கும் யாரும் இது ஏஐ படங்கள் என்பதை நம்ப மாட்டார்கள். அந்தளவுக்கு இது தத்ரூபமாக இருக்கிறது.
டெஸ்லா உருவாக்கி வரும் இந்த ஆப்டிமஸ் ரோபோவை எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்தார். அதில் சில ஏஐ மென்பொருளும் டெஸ்லா கார்களில் உள்ள தானியங்கி டிரைவிங் மோடிற்கு பயன்படுத்தப்படும் சென்சார்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இப்போது வெளியாகியுள்ள படங்கள் ஆப்டிமஸின் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications