அமெரிக்காவில் திருப்பம்! புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்.. ஆனாலும் அதிபராக முடியாது! ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி என இரு கட்சிகளுமே மாறி மாறி அதிகாரத்தில் இருந்து வருகின்றன. இருப்பினும், இரு கட்சி ஆட்சி முறையால் அங்கு மக்கள் அதிருப்தியில் இருப்பதாக நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது. இதற்கிடையே உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் அமெரிக்கா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் முன்னணித் தொழிலதிபரும் உலகின் மாபெரும் கோடீஸ்வரராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ட்விட்டர், நியூரோலிங் எனப் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதேபோல அரசியலிலும் அங்குத் தீவிரமாக இருந்தார். கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக ஊர் ஊராகப் போய் பிரச்சாரம் செய்திருந்தார்.

Elon Musk America Trump

எலான் மஸ்க்

அதேபோல டிரம்ப் வென்றவுடன் எலான் மஸ்கிற்கு டாஜ் எனப்படும் அரசு செலவுகளைக் குறைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், எலான் மஸ்க் டிரம்ப் இடையே சீக்கிரமே மோதல் வெடித்தது. இதையடுத்து அவர் அரசு நிர்வாகத்தில் இருந்தும், டாஜ் துறையில் இருந்தும் வெளியேறினார். இடையில் அவர் அதிபர் டிரம்ப்பை விமர்சித்தது எல்லாம் தனிக்கதை.

இந்தச் சூழலில் தான் எலான் மஸ்க் அங்குப் புதிதாகக் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி என இரு கட்சிகளுமே மாறி மாறி அதிகாரத்தில் இருந்து வருகின்றன. இரு கட்சிகள் மட்டுமே இருப்பதால் மக்களுக்கு வேறு ஆப்ஷன்கள் இருப்பதில்லை என்று குறிப்பிட்ட எலான் மஸ்க், புதிதாக அமெரிக்கா கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார்.

புதிய கட்சி

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "உங்களுடைய சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பதற்காகவே அமெரிக்கா கட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டிருந்தார். மேலும், சமீபத்திய நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 2:1 என்ற மக்கள் புதிய கட்சி தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தார்.

எலான் மஸ்க் மேலும், "நமது நாட்டை வீண் மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கவே முயல்கிறார்கள். கிட்டதட்ட நாம் ஒரு கட்சி முறையில்தான் வாழ்கிறோம், அது ஜனநாயகம் அல்ல. உங்களுடைய சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பதற்காகவே அமெரிக்கா கட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய அமெரிக்கக் கட்சி அமெரிக்காவின் உரிமைகளை மீட்டெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அரசியல்

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு இரு கட்சிகள் மட்டுமே இருக்க வேண்டும் என எந்தவொரு ரூல்ஸும் இல்லை. இருப்பினும், அங்குப் பல ஆண்டுகளாகவே இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அங்குக் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பல்வேறு சர்வேக்களிலும் மக்கள் புதிய கட்சி வேண்டும் என்றே கருத்து கூறியுள்ளனர். இருப்பினும், சில காரணங்களால் மூன்றாவது கட்சியால் அமெரிக்காவில் வெற்றி பெற முடியவில்லை.

அதிபராக முடியாது!

இந்தச் சூழலில் தான் எலான் மஸ்க் தனது புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதேநேரம் எலான் மஸ்க்கின் இந்த புதிய கட்சி அதிபர் தேர்தலில் வென்றாலும் கூட அவரால் அதிபராக முடியாது. அமெரிக்கச் சட்டத்தின்படி ஒருவர் அதிபராக அவர் அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும். எலான் மஸ்க் அமெரிக்கக் குடிமகனாக இருந்தாலும் கூட அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். இதனால் அவர் தேர்தலில் வென்றாலும் அதிபராக முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+