உலகின் ‘நம்பர் 1’ கோடீஸ்வரர் நிலையை இழந்த எலான் மஸ்க்.. ஃபோர்ப்ஸ் லிஸ்ட்டில் சறுக்கல்! காரணம் இதான்!
வாஷிங்டன் : எலான் மஸ்க், உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற நிலையை இழந்துள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை Forbes இதழ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்து வருகிறார். அவருக்கு முன், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அந்த இடத்தில் இருந்தார்.
டெஸ்லா, ட்விட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் தற்போது உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 180 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சென்ற ஆண்டைவிட 39 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.

உலகப் பணக்காரர் பட்டியலில் பிரான்ஸ் சொகுசுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான LVHM-இன் தலைவர் பெர்னர்ட் ஆர்னால்ட் (Bernard Arnault) முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 211 பில்லியன் டாலர். LVMH நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டில் 25% உயர்ந்தது இந்த அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் உலகப் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுவது எதிர்பார்க்கப்பட்டது தான் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள். எலான் மஸ்க் கடந்தாண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார்.
டெஸ்லா நிறுவனத்தில் இருந்த தனது பங்குகளைப் பயன்படுத்தி அவர் பணம் திரட்டியதால் முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டனர். அதன் காரணமாக டெஸ்லாவின் பங்குகளின் மதிப்பும் பெரிய அளவில் சரிவைச் சந்தித்தது. இதுவும் எலான் மஸ்க்கின் உலகப் பணக்காரர் லிஸ்ட் படியிறக்கத்துக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இந்தப் பட்டியலில் பின்தங்கி இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் தனது சொத்து மதிப்பில் 57 பில்லியன் டாலர் இழந்துள்ளார். கடந்த ஆண்டு அமேசான் பங்குகள் கிட்டத்தட்ட 40% மதிப்பை இழந்ததே இந்த இழப்புக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சைரஸ் பூனாவாலா, லட்சுமி மிட்டல் ஆகியோர் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications