"யூ டர்ன்.." ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்த மறுத்த பிரபலங்கள்! வேறு வழியின்றி மஸ்க் எடுத்த முடிவு
வாஷிங்டன்: ட்விட்டர் தளத்தில் சமீபத்தில் தான் முதல்வர் ஸ்டாலின், தொடங்கி பல்வேறு பிரபலங்களும் தங்கள் ப்ளூ டிக் ஆப்ஷன்களை இழந்தனர். இதனிடையே இது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக் பெறக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்து இருந்தது அனைவருக்கும் தெரியும். மாதம் 8 டாலர் அளவுக்கு அனைவருக்கும் செலுத்தினால் மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக்குகள் அனைத்தும் கடந்த 20ஆம் தேதியுடன் நீக்கப்பட்டது. நமது நாட்டிலும் பல டாப் பிரபலங்களும் கூட ப்ளூ டிக்குகளுக்கு கட்டணம் செலுத்தவில்லை.
இதனால் அவர்கள் அனைவரும் ப்ளூ டிக் மார்க்குகளை இழந்தனர். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், விராட் கோலி தொடங்கி பல்வேறு பிரபலங்களும் தங்கள் ப்ளூ டிக் மார்க்குகளை இழந்தனர். ப்ளு டிக் மார்க்குகளுக்கு கட்டணம் செலுத்த முடியாது என்பதில் பிரபலங்கள் பலரும் உறுதியாக இருந்தனர். பிரபலங்களைப் பின்தொடரவே பல கோடி பேர் ட்விட்டரை பயன்படுத்துகிறார்கள். அதாவது பிரபலங்கள் இருப்பதாலேயே ட்விட்டரில் பயனாளர்கள் அதிகம் வருகிறார்கள்.

எங்கள் மூலம் ட்விட்டருக்கு வருமானம் கிடைக்கும் போது, நாங்கள் ஏன் ப்ளூ டிக்குகளுக்கு சந்தா செலுத்த வேண்டும் என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது. இதனிடையே லெப்ரான் ஜேம்ஸ், ஸ்டீபன் கிங் மற்றும் வில்லியம் ஷாட்னர் உள்ளிட்ட ப்ளூ டிக்குகளுக்கு தான் தனிப்பட்ட முறையில் கட்டணம் செலுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் இப்போது அனைத்து பிரபலங்களுக்கும் மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பிட்ட பிரபலங்கள் என இல்லாமல் அனைத்து பிரபலங்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு பிரபலங்களும் தாங்கள் ப்ளூ டிக்குகளுக்கான கட்டணத்தைச் செலுத்தவில்லை என்ற போதிலும், தங்களுக்கு ப்ளூ டிக் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சில பிரபலங்கள் இது குறித்து வெளிப்படையாகவே கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாகப் பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங்ஸ், "ப்ளூ டிக் விவகாரத்தில் எலான் மஸ்க் உரிய விளக்கத்தைத் தர வேண்டும். கடந்த காலங்களில் இது மக்களுக்குப் பெரியளவில் உதவியுள்ளது.

அப்படியிருக்கும் ப்ளூ டிக்குகளை வைத்து இப்படி விளையாடுவது சரியானது இல்லை. இதற்கு அவர் உரிய விளக்கம் தர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். ஆலியா பட், விராட் கோலி, ஷாருக்கான் போன்ற பாலிவுட் பிரபலங்களும் ப்ளூ டிக்கை இழந்து இருந்தனர். ஆனால், இப்போது அவர்களுக்கும் மீண்டும் இந்த ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவர்கள் இதற்குக் கட்டணம் செலுத்தியுள்ளார்களா எனத் தெளிவாகத் தெரியவில்லை.
இதில் உள்ள மற்றொரு விசித்திரமான விஷயம் என்னவென்றால், உயிரிழந்த பிரபலங்களின் செயலற்ற கணக்குகளுக்கும் கூட ப்ளூ டிக் மீண்டும் வந்துவிட்டது. மைக்கேல் ஜாக்சன், பிளாக் பேந்தர் புகழ் சாட்விக் போஸ்மேன் ஆகியோருக்கும் ப்ளூ டிக் வந்துள்ளது. பிரபலங்கள் பலரும் தாங்கள் ப்ளூ டிக்குகளுக்கு கட்டணம் செலுத்தாத போதும் அவை வந்துள்ளதாக எலான் மஸ்கை டேக் செய்து பதிவிட்டுள்ளனர். அவர்களில் பலருக்கும் எலான் மஸ்க் ரிப்ளையும் கூடச் செய்துள்ளார். இருப்பினும், ஏன் மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டது என்பதை அவர் வெளிப்படையாகக் கூறவில்லை.

ட்விட்டர் தளத்தில் முன்பு, ஆக்டிவாக உள்ள பெரிய பிரபலங்களுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்பட்டு வந்தது. அதற்கு நாம் விண்ணப்பிக்க வேண்டும். அதேநேரம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும், அதை அவர்கள் எப்படி பரிசீலனை செய்வார்கள் என்பதில் எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இருந்ததும் இல்லை. ஆனால், இந்த சந்தா முறையில் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம். இதற்காக மாத சந்தாவாக நாம் 8 டாலர்களை செலுத்தினால் போதும்.
மேலும் ப்ளூ டிக் சந்தாதாரர்களுக்குக் குறைவான விளம்பரங்கள், ட்வீட்களைத் திருத்தும் வசதி உள்ளிட்டவை அளிக்கப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications