எலான் மஸ்க்கை ‛நோஸ் கட்’ செய்த சாம் ஆல்ட்மேன்.. சாட் ஜிபிடியின் ஓபன்ஏஐ-யை விலைபேசியபோது சம்பவம்
வாஷிங்டன்: உலகின் நம்பர் ஒன் பணக்காரரான டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் சாட்ஜிபிடியை கண்டுபிடித்த ஓபன்ஏஐ நிறுவனத்தை சுமார் 97.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க முடிவு செய்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்கு நடுவே ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், எலான் மஸ்க்கிற்கு நோஸ்கட் கொடுத்துள்ளதோடு, எக்ஸ் நிறுவனத்தை வாங்க விரும்புகிறோம். தருகிறீர்களா? என்று கூறியுள்ளார்.
உலகின் பெரும் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார். அதோடு எக்ஸ் வலைதள பக்கத்தின் உரிமையாளராகவும் அவர் உள்ளார். தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்துக்கு கோடிகளை கொட்டிய எலான் மஸ்க் தற்போது அவருடன் நெருக்கமாக உள்ளார்.

மேலும் அமெரிக்காவில் DOGE அமைப்பின் தலைவராக எலான் மஸ்க்கை, டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். இந்த அமைப்பு என்பது தேவையில்லாத செலவை கண்டுபிடித்து டொனால்ட் டிரம்பிடம் கூறும் பணியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் USAID எனும் அமைப்பை தனது அறிக்கை மூலமாக எலான் மஸ்க் டொனால்ட் டிரம்ப் மூலம் இழுத்து மூடியுள்ளார். இந்த USAID என்பது அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்யும் வகையில் வழங்கி வந்தது. தற்போது USAID மூலம் மேற்கொள்ளும் பணி, நிதி ஒதுக்கீடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இப்போது எலான் மஸ்க் முன்பை விட அதிகமாக பேசும் பொருளாகி வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்றால் அதன் 50 சதவீத பங்கை அமெரிக்கருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் டிக்டாக் நிறுவனத்திடம் கூறியுள்ளார். அதோடு டிக்டாக் நிறுவனத்தின் 50 சதவீத பங்கை அமெரிக்காவில் எலான் மஸ்க் வாங்கினால் ஆதரவு அளிப்பேன் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் எலான் மஸ்க் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி ள்ளது. அதாவது எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர்களின் குழு, ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வமாக உள்ளது. இந்த ஓபன் ஏஐ நிறுவனம் தான் சாட்ஜிபிடியை கண்டுபிடித்தது. இந்த நிறுவனம் கடந்த 2015ல் தொடங்கப்பட்டது. அப்போது நிறுவனத்தை தொடங்கிய நபர்களில் எலான் மஸ்க்கும் ஒருவராக இருந்தார். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக எலான் மஸ்க் கடந்த 2018 ம் ஆண்டில் ஓபன்ஏஐ போர்ட் ஆஃப் டைரக்டர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார்.
இப்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு எலான் மஸ்க்கின் பார்வை ஓபன்ஏஐ நிறுவனம் மீது பட்டுள்ளது. அதாவது ஓபன்ஏஐ நிறுவனம் லாபநோக்கமற்ற நிறுவனமாக தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த நிறுவனம் லாபத்தை நோக்கி நகரும் பணியை தொடங்கி உள்ளது. இதற்காக ஏஐ சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர் வரை நிதி திரட்டவும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் முடிவு செய்துள்ளார். இப்படியான சூழலில் தான் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர்கள் குழு ஓபன்ஏஐ நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் தரப்பு வாங்க முன்வந்துள்ளது. இதுதொடர்பாக நேற்று ஓபன்ஏஐ நிறுவனத்திடம் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர்களின் குழு வழங்கி உள்ளது ஆனால் இதற்கு சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் ட்விட்டர் (இப்போது எக்ஸ்) தளத்தை 9.74 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஓபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து பதவியை ராஜினாமா செய்த எலான் மஸ்கை அவர் ‛நோஸ் கட்' செய்துள்ளார்.
அதாவது ‛‛நீங்கள் என்ன எங்களின் ஓபன்ஏஐ நிறுவனத்தை வாங்குவது. நீங்கள் சொன்னால் நாங்களே எக்ஸ் தளத்தை வாங்கி கொள்கிறோம்'' என்று பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது ஓபன்ஏஐ நிறுவனத்தை தொடங்கும்போது சாம் ஆல்ட்மேனுடன், எலான் மஸ்க்கும் இணை நிறுவனராக இருந்தார். அதன்பிறகு ஓபன்ஏஐ நிறுவனத்தை முழுவதுமாக தன்கட்டுப்பாட்டில் வைக்க எலான் மஸ்க் விரும்பினார். ஆனால் மற்றவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவர் பதவி விலகினார். அதோடு தொடர்ந்து ஓபன்ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இப்போது மீண்டும் அந்த நிறுவனத்தை எலான் மஸ்க் தரப்பு விலை பேசுவதால் சாம் ஆல்ட்மேன் வழங்க முன்வரவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications