வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாத்தி கமிங்.. தன்னோட ஹோம்ஒர்க்கை பத்திரமா வச்சிருந்த வாத்தியாரிடம் வாங்கி ரிலீஸ் செய்த எலான் மஸ்க்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கல்லூரியில் படித்த போது தான் செய்த ஹோம்வொர்க்கை பத்திரமாக வைத்திருந்த தனது இயற்பியல் ஆசிரியரிடம் கேட்டு வாங்கி அவற்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது. இந்த போஸ்ட் போடப்பட்ட சில நிமிடங்களில் ஏராளமானோர் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

Recommended Video

    மனித மூளைக்குள் Chip வைக்கும் Elon Musk | Neuralink In Tamil | Oneindia Tamil

    பள்ளியாக இருந்தாலும் சரி கல்லூரியாக இருந்தாலும் சரி ஒவ்வொரு ஆண்டும் முடிந்தவுடன் முக்கியமான புத்தகங்களை சிலர் எடுத்து வைப்பது வழக்கம். அது போல் பெரும்பாலானோர் மொத்த புத்தகங்களை எடைக்கு போட்டுவிடுவதும் நடக்கிறது.

    லாக்டவுன் ஓபன் பண்ணதும் இப்படியா? சென்னையில் துணிக்கடை தந்த அடடே ஆபர்.. குவிந்த கூட்டம்.. சீல்!லாக்டவுன் ஓபன் பண்ணதும் இப்படியா? சென்னையில் துணிக்கடை தந்த அடடே ஆபர்.. குவிந்த கூட்டம்.. சீல்!

    எலான் மஸ்க்

    எலான் மஸ்க்

    மாணவர்களே அப்படியென்றால் ஆசிரியர்கள் மாணவர்களின் ஹோம்வொர்க்கை எடுத்து வைத்திருக்க வேண்டும் என சொல்வதில் நியாயமே இல்லை. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கின் இயற்பியல் ஆசிரியர் மஸ்கின் கல்லூரி காலத்து ஹோம்வொர்க்கை அப்படியே பத்திரப்படுத்தி வைத்துள்ளாராம்.

    மஸ்கின் ஆசிரியர்

    மஸ்கின் ஆசிரியர்

    இதுகுறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் என்னுடைய இயற்பியல் ஆசிரியர் எனது பழைய ஹோம்வொர்க்களை பத்திரமாக வைத்துள்ளதாக அறிந்தேன் என பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்கள் பெரும்பாலானோர் மஸ்கிடம் அந்த ஹோம்வொர்க்கை புகைப்படமாக எடுத்து வெளியிட வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    நழுவிய மஸ்க்

    நழுவிய மஸ்க்

    உங்கள் ஹோம்வொர்க்கை எங்களுக்கு காட்ட முடியுமா என நெட்டிசன் ஒருவர் மஸ்கிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மஸ்கோ அது மிகவும் தர்மசங்கடமானது என பதில் அளித்திருந்தார். டெஸ்லா ஓனர்ஸ் சிலிகான் வேலி, உங்கள் வாத்தியார் என்ன ஹோம்வொர்க்கை வைத்திருக்கிறார் என தெரியுமா என கேட்டிருந்தது.

    ட்விட்டரில் பாராட்டு

    ட்விட்டரில் பாராட்டு

    இதையடுத்து எலான் மஸ்க் தான் கைப்பட செய்திருந்த ஹோம்வொர்க்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மஸ்க் கூறுகையில் இன்னொரு இயற்பியல் ஆசிரியரின் நண்பர் மூலம் எனது ஆசிரியர் நான் செய்த ஹோம்வொர்க்களை அனுப்பியுள்ளார். இது மிகவும் அடிப்படையான விஷயம் என குறிப்பிட்டு ஹோம்வொர்க் படங்களை வெளியிட்டார். இதற்கு நல்ல கையெழுத்து என பாராட்டி வருகிறார்கள். இன்னும் சிலர் செவ்வாய்க் கிரகத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் போது இந்த ஹோம்வொர்க் அதில் வைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tesla and Space X CEO Elon Musk released his physics homework in twitter. His physics teacher still has some of his old homework.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X