கமலா ஹாரிஸ் ஜெயித்தால், நான் குழந்தை தருவேன்.. பாடகி டெய்லர் ஸ்விஃப்டுக்கு எலான் மஸ்க் மட்டமான பதில்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவரை, ட்ரம்ப் ஆதரவாளரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட். அமெரிக்காவைப் பொருத்தவரை பாப் பாடர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பல உச்ச நட்சத்திரங்களைக் கொண்ட துறையாக அங்கே இசைத் துறை உள்ளது. அமெரிக்காவில் உள்ள முக்கிய பாப் பாடர்களின் ஒருவர்தான் டெய்லர் ஸ்விஃப்ட். இவருக்கு உலகெங்கிலும் கோடிக் கணக்கிலான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு தன்னுடைய வாக்கினை அளிக்கவுள்ளதாக டெய்லர் ஸ்விஃப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே இரவு நடந்த விவாதத்தை உங்களைப் போல நானும் பார்த்தேன். நான் கமலா ஹாரிஸுக்குதான் வாக்களிக்கவுள்ளேன். ஏனெனில் அவர் உரிமைகளுக்காகப் போராடுகிறார். கமலா ஹாரிஸ் நிலையான, திறமையான தலைவர் என்று நான் நினைக்கிறேன்.
குழப்பம் எதுவும் இல்லாமல், அமைதியாக நாம் வழிநடத்தப்பட்டால் இந்த நாட்டில் பலவற்றை நாம் சாதிக்க முடியுமென நான் நம்புகிறேன். தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காக, பெண்களின் உரிமைகளுக்காக போராடும் டிம் வால்ஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அந்த முடிவால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் நான் ஆதரிக்கும் பொய்யான ஏஐ படங்களை அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததை அறிந்தேன். ஏஐ குறித்த எனது அச்சம் மற்றும் தவறான தகவல் பரப்பப்படுவதால் ஏற்படும் ஆபத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. இந்த சம்பவம் இந்த தேர்தலில் ஒரு வாக்காளராக என்னுடைய நிலைப்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு என்னை கொண்டு வந்துள்ளது. தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி உண்மை மட்டும்தான்.
எனதளவில் ஆய்வு செய்து நான் எனது விருப்பத்தை கூறியுள்ளேன். நீங்கள் வாக்களிப்பதும், தேர்வு செய்வதும் உங்களுடைய விருப்பம் சார்ந்தது. முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று மட்டும்தான். தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை நினைவில் வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெய்லர் ஸ்விஃப்ட் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்துள்ளதை விமர்சிக்கும் வகையில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஃபைன் டெய்லர்... நீங்கள் வெற்றி பெற்றால்... நான் உங்களுக்கு ஒரு குழந்தை தருகிறேன். மேலும், உங்கள் பூனைகளையும் நான் எப்போதும் பாதுகாப்பேன் என்று பதிவிட்டுள்ளார். எலான் மஸ்கின் இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
புலம் பெயர்ந்தவர்கள், வளர்ப்பு நாய், வளர்ப்பு பூனைகளை சாப்பிட்டார்கள் என்று ட்ரம்ப் தனது விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இது பொய்யான தகவல் என மீடியாக்கள் ஃபேக்ட் செக் செய்துள்ளன. இருப்பினும், பூனைகளை பாதுகாப்பேன் என்று கூறியதன் மூலம், ட்ரம்ப் சொன்னதை மஸ்க் வழிமொழிந்துள்ளார். கமலா அதிபரானால் பூனைகளை சாப்பிடக்கூடிய புலம்பெயர் மக்கள் அதிகரிப்பார்கள் என்பதை மஸ்க்கும் வழிமொழிந்துள்ளார்.












Click it and Unblock the Notifications