Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WWE.. "ரெடியா இரு.." அலறவிடும் எலான் மஸ்க்.. மார்க்கை இப்படியெல்லாம் பாய்ந்து பாய்ந்து அடிப்பாராம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் டாப் பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் நேருக்கு நேர் சண்டையில் மோத உள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்த முக்கிய கருத்தை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த நவீன உலகம் முழுக்க முழுக்க செயலிகள் மற்றும் டெக் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது. அதன்படி இப்போது மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவை உள்ளன.

 Elon Musk revealed that he is going to follow WWE style in fight with Mark Zuckerberg

இதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை மார்க் ஜுக்கர்பெர்க் வசம் இருக்கும் நிலையில், ட்விட்டர் எலான் மஸ்கிடம் இருக்கிறது. எலான் மஸ்க் கடந்தாண்டு தான் பெரும் போராட்டத்திற்கு நடுவே ட்விட்டரை வாங்கினார்.

அதிரடி நடவடிக்கை: டவிட்டர் நிறுவனத்தில் யூசர்கள் அதிகம் இருந்தாலும் அதில் இருந்து பெரியளவில் வருமானம் கிடைக்கவில்லை. இதனால் ட்விட்டரை வாங்கிய மஸ்க் கையோடு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். ட்விட்டரின் டாப் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய மஸ்க், ஆட்குறைப்பிலும் இறங்கினார். அதன் பிறகும் கூட தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்தார். அதில் பல நடவடிக்கைகள் சர்ச்சையானது.

ட்விட்டர் நிறுவனத்தின் மீதான நல்ல பிம்பத்தை கெடுக்கும் வகையில் இருந்தது.. இந்தச் சூழலில் தான் ட்விட்டரை மொத்தமாக காலி செய்யும் வகையில் ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் (Threads) என்ற மற்றொரு சமூக வலைத்தளத்தை பேஸ்புக் தொடங்கியது. இது எலான் மஸ்கிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. யாருக்கும் எந்தவொரு ஆப்ஷனும் இல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் மார்க் ஜுக்கர்பெர்க் கட்டுப்படுத்த முயல்வதாக வெளிப்படையாகவே மஸ்க் சாடினார்.

மோதல்: இதற்கு முன்பே பேஸ்புக் அனுப்பிய ராக்கெட்டை எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் சொதப்பிய விவகாரத்தில் இருவருக்கும் இடையே ஏழாம் பொருத்தம் தான் இருந்தது. த்ரெட்ஸின் வரவு இருவருக்கும் இடையேயான உறவை மேலும் மோசமானதாக மாற்றியது. இதனிடையே எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இடையே கேஜ் மேட்ச் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதை இருவருமே மறுக்கவில்லை. மாறாக பயிற்சி பெறும் வீடியோக்களையே பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கேஜ் மேட்சில் தனது சண்டை ஸ்டைல் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை மஸ்க் பகிர்ந்துள்ளார். பிரபல WWE நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவை பகிர்ந்த எலான் மஸ்க், "நான் WWE ஸ்டைலை பின்பற்றி போட்டியில் சண்டையிட போகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

காரசார மோதல்: இது தொடர்பாக இருவருக்கும் இடையே காரசாரமான வார்த்தை மோதல் தொடர்ந்தே வருகிறது. "நாள் முழுக்க வெயிட் தூக்கி சண்டைக்குத் தயாராகி வருகிறேன். வொர்க் அவுட் செய்ய நேரமில்லை.. இருப்பினும் போட்டிக்கு தயாராகி வருகிறேன்" என அவர் பதிவிட்டுள்ளார். போட்டிக்கு தான் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இருவருக்கும் இடையேயான மோதல் தனது X, அதாவது ட்விட்டரில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்கப்படும் என மஸ்க் தெரிவித்திருந்தார். அதற்கு நக்கலாக பதிலடி கொடுத்த மார்க், "நேரடியாக ஒளிபரப்ப வேறு நம்பகமான தளம் தேவை.. அப்போது தான் தொண்டு நிறுவனங்களுக்கு உரிய தொகையை திரட்ட முடியும்" என்று பதிலளித்திருந்தது குறிப்பிடதக்கது..

இருவருக்கும் இடையே மோதல் நடக்கவுள்ளதாக பல காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் கூட எப்போது இந்த மோதல் நடக்கும்.. எங்கு நடக்கும் என எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உண்மையில் மோதல் நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளதாகவும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+