கல்லூரி காலத்தில் லவ்வோ லவ்.. எலான் மஸ்க்கின் காதல் கடிதம், புகைப்படங்களை ஏலம் விட்ட முன்னாள் காதலி
வாஷிங்டன்: உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கின் கல்லூரி கால காதல் கடிதங்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை எலான் மஸ்கின் முன்னாள் காதலி ஏலம் விட்டுள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரும் உலகின் நம்பர் 1 பணக்காரருமான எலான் மஸ்க் குறித்த செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லிவிடலாம்.
அந்த அளவுக்கு தற்போது உலக அளவில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக எலான் மஸ்க் உள்ளார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்கின் தொழில் சாம்ராஜ்ஜியம் பற்றிய செய்திகள் ஒருபக்கம் என்றால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளும் பரவி இணைய உலகில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. ஸ்பேஸ்எக்ஸில் விமானப் பணிப்பெண்ணிடம் மஸ்க் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு முதல், கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடன் எலான் மஸ்க் சிறிது காலம் உறவில் இருந்ததாக வெளியான செய்திகள் வரை அனைத்தும் பரபரப்பை கிளப்பி வருகின்றன.

கல்லூரி காதல்
இந்த இரண்டு விவகாரங்களையும் எலான் மஸ்க் மறுத்துவிட்டாலும் அவரை பற்றி மேலும் பல செய்திகள் அடிக்கடி வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் கல்லூரி கால காதல் கடிதங்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை எலான் மஸ்கின் முன்னாள் காதலி ஏலம் விட்டுள்ள சம்பவம் மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது. எலான் மஸ்க் தனது கல்லூரி காலத்தில் ஜெனிபர் க்வின் என்பவரை காதலித்து இருந்திருக்கிறார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இவருடன் எலான்மஸ்க் டேட்டிங்கில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு வருடம் நீடித்தது
தங்கள் கல்லூரி காலத்தில் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்ததோடு புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்துள்ளனர். ஒருவருடம் காதலில் இருந்த இந்த ஜோடி பின்னர் ஏதோ காரணங்களால் பிரிந்துள்ளது. அதன்பிறகு இத்தனை ஆண்டுகளில் எலான் மஸ்க்கின் வாழ்க்கை எப்படியோ மாறிவிட்டது. உலகின் நம்பர் 1 பணக்காரராகவும் எலான் மஸ்க் மாறிவிட்டார்.

பழைய புகைப்படங்களை ஏலம்
புகழ், பணம் என அனைத்திலும் உச்சத்த்துக்கு எலான் மஸ்க் சென்றுவிட்ட நிலையில், எலான் மஸ்க்கின் முன்னாள் காதலி பழைய புகைப்படங்களை ஏலத்திற்கு விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலான் மஸ்கின் இளைமைக்கால படங்கள் பலவும் ஏலத்திற்கு வந்துள்ளன. எலான் மஸ்க் உருகி உருகி எழுதிய பர்த்டே கார்டுகள் மற்றும் பரிசாக அளித்த தங்க நெக்லஸ் உள்ளிட்டவற்றையும் ஏலத்திற்கு விட்டுள்ளார் ஜெனிபர் க்வின்.

டியூஷன் செலவை ஈடுகட்ட
தனது வளர்ப்பு மகனின் கல்லூரி டியூஷன் செலவை ஈடுகட்ட இந்த புகைப்படங்களை ஏலத்திற்கு விடும் முடிவுக்கு ஜெனிபர் க்வின் வந்ததாக கூறப்படுகிறது. இணையதள நிறுவனம் மூலமாக இந்த புகைப்படங்களை ஏலத்திற்கு விட்டுள்ளார். தற்போது நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்கின் கல்லூரிக்கால காதல் கடிதங்கள், தனிப்பட்ட புகைப்படங்கள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications