எலான் மஸ்க் வெற்றியின் ரகசியம்! 12 ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி சொன்ன முக்கிய விஷயம்!
வாஷிங்டன்: எலான் மஸ்க் பற்றி எல்லோருக்கும் தெரியும். உலகின் மிகப்பெரிய பணக்காரர், மனித குல எதிர்காலத்திற்கான பணிகளை செய்யக்கூடியவர். இருப்பினும் அவர் இந்த இடத்திற்கு வந்திருப்பதற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பை வெற்றியாக மாற்றியதற்கு ஒரு ரகசியத்தை மஸ்க் பின்பற்றி இருக்கிறார். இது குறித்து அவரது முன்னாள் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன விஷயம் தற்போது மீண்டும் பரவலாக ஷேராகி வருகிறது.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்புவது, அங்கு உயிர்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது, ஆய்வுகளை அலசி ஆராய்ந்து, மனித குல வளர்ச்சிக்கு அதை பயன்படுத்துவது என எலான் மஸ்க் பிஸியாக இருக்கிறார். அவர் தற்போது இந்த அளவுக்கு வளர்ச்சியை எட்டியதற்கு, அவர் பின்பற்றிய வழிமுறைகள்தான் காரணம் என அவரது முன்னாள் மனைவி ஜஸ்டின் மஸ்க் கூறியிருக்கிறார். இதை தெரிந்துக் கொண்டால் நம்மாலும் உயர்ந்த இலக்குகளை அடைய முடியும்.

ஜஸ்டின் மஸ்க் சொன்னது இதுதான்
கடந்த 2014ல் ஒரு நேர்க்காணலில் எலான் மஸ்கின் வெற்றியின் ரகசியத்தை ஜஸ்டின் விவரித்தார். அதாவது எலான் மஸ்க்கு எளிதாக எல்லா விஷயங்களுக்கும் 'எஸ்' என ஒப்புக்கொள்ளும் மனிதர் கிடையாது. பெரும்பாலான விஷயங்களுக்கு அவர் 'நோ' சொல்லிவிடுவார். உதாரணத்திற்கு எலான் மஸ்கை போல பெரும் பணக்காரர் ஒருவர் தனது இல்லத்தின் திருமண விழாவுக்கு வர மஸ்குக்கு அழைப்பு விடுத்தால் போக மாட்டார். காரணம் இதற்காக செலவிடப்படும் நேரம் தனது நோக்கத்தை நிறைவேற்ற பயன்படுமா? என யோசிப்பார்.
சிந்திக்கும் திறன்
பயன்படாத என்று தெரிந்தால், அவர் அந்த நிகழ்ச்சிக்கு போக மாட்டார். அது எவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி. நிகழ்ச்சியில் செலவிடும் நேரத்தை, ராக்கெட்டின் எரிபொருள் குறித்து சிந்திக்க பயன்படுத்துவார் என்று ஜஸ்டின் கூறியிருக்கிறார்.
ஊழியர்களுக்கு அறிவுரை
நிகழ்ச்சி மட்டுமல்ல, நீண்ட உணவருந்துதல், பிடித்த உடைகளை தேர்ந்தெடுப்பது, டிவி பார்ப்பது, மொபைல் நோண்டுவது என எல்லாவற்றிற்கும் அவர் நோ சொல்லிவிடுவார். அவர் மட்டும் கிடையாது அவரது நிறுவனத்திலும் இதே பார்முலாவை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். ஊழயர்கள் மீட்டிங்களில் பங்கேற்கிறார்கள் எனில், அங்கு புதியதாக எதையும் கற்றுக்கொள்ள இல்லை, அல்லது அங்கு நீங்கள் இருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை எனில், உடனடியாக அங்கிருந்து வெளியேறி விடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
முடிவெடுக்கும் திறன்
மஸ்க் இப்படி சொல்வதற்கு பின்னால் உளவியல் காரணங்கள் இருக்கின்றன. காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை நீங்கள் 100 முடிவுகளை எடுக்கிறீர்கள் எனில் அதில் முதல் 30-50 முடிவுகள்தான் சரியானதாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஏனெனில், மூளையின் முடிவெடுக்கும் அமைப்பானது பல விஷயங்களில் தனது எனர்ஜியை செலவழிக்கிறது.
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
உதாரணமாக, என்ன டிரஸ் போடுவது? என்ன சாப்பிடுவது? இப்படியான முடிவுகளை எடுக்கும்போது இந்த அமைப்பு சோர்வடைந்துவிடுகிறது. எனவே சரியான முடிவை எடுக்கும் போது போதுமான எனர்ஜி இல்லாததால் அது சோர்வடைந்து தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications