போதும்பா! டிரம்பிற்கு பெரிய கும்பிடு போட்ட எலான் மஸ்க்.. டாஜ்-ல் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகுவதாக அறிவித்துள்ளார். டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, செயல் திறன் துறை (Department of Government Efficiency - DOGE) என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு இதன் தலைவராக எலான் மஸ்க் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் டாஜ் துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பிற்கு பெரிதும் பக்க பலமாக நின்றார் எலான் மஸ்க். டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டது மட்டும் இன்றி அவருக்காக தேர்தல் நிதியாக பெருமளவு தொகையும் கொடுத்தார்.

இதன் காரணமாகவே டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவராக எலான் மஸ்க் மாறினார். டிரம்ப் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், அவரது நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பை கொடுத்தார். டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, செயல் திறன் துறை (Department of Government Efficiency - DOGE) உருவாக்கப்பட்டது. அரசு செலவுகளைக் குறைக்கும் துறையான இதற்கு எலான் மஸ்க் தலைவராக நியமிக்கப்பட்டார்.
எலான் மஸ்க் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டார். எலான் மஸ்க் எடுக்கும் நடவடிக்கைகள் அமெரிக்க மக்களுக்கு கடும் அதிருப்தியை கொடுத்தது. எலான் மஸ்கிற்கு எதிராகவும் டெஸ்லா நிறுவனத்திற்கு எதிராகவும் நாடு முழுக்க போராட்டங்களை நடத்தினர். இதெல்லாம் எலான் மஸ்க்கிற்கு நெருக்கடியை கொடுத்து இருந்த நிலையில், டாஜ் துறையில் இருந்து விலக இருப்பதாக எலான் மஸ்க் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் பற்றாக்குறையை $1 டிரில்லியன் குறைத்து, தற்போதைய பெடரல் அரசின் செலவை சுமார் $6 டிரில்லியனாக குறைத்த பின்னர், டாஜ் துறையில் இருந்து விலகவுள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில்தான், டாஜ் துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். எலான் மஸ்க் கூறியிருப்பதாவது:-
"அரசின் சிறப்பு துறை ஊழியராக எனது பணிக்காலம் முடிவடைந்துவிட்டது. டொனால்டு டிரம்பிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வீண் செலவுகளை கட்டுப்படுத்த எனக்கு வாய்ப்பளித்தார். டாஜ் திட்டம் காலப்போக்கில் வலுப்பெறும்" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications