டிரம்பை வாயை மூட சொன்ன எலான் மஸ்க் மகன்! அடுத்து சொன்ன வார்த்தை இருக்கே.. அதிபர் ரியாக்ஷன் என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பை சமீபத்தில் நேரில் சந்திக்கும் போது எலான் மஸ்க் தனது மகன் எக்ஸை உடன் அழைத்துச் சென்றிருந்தார். அங்கு எலான் மஸ்கின் 4 வயதுக் குழந்தை எக்ஸ் செய்த காரியம் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நேராக டிரம்பிடம் சென்று நீ அதிபரே இல்லை.. வாயை மூடு எனச் சொன்னதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான பிறகு டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

சீனா, ரஷ்யா மட்டுமின்றி கிட்டதட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் வரிகளை விதிக்கப் போவதாக அறிவித்துக் கொண்டே இருக்கிறார். இது சர்வதேச வணிகத்திற்குச் சிக்கலை ஏற்படுத்துகிறது. இது ஒரு பக்கம் இருக்கச் சமீபத்தில் நடந்த டிரம்ப்- எலான் மஸ்க் சந்திப்பும் கூட இணையத்தில் டிரெண்டாகி வருகிறது
டிரம்ப்- எலான் மஸ்க் சந்திப்பு:
அதாவது சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் இணைந்து ஒரு சந்திப்பை நடத்தினர்.. அதிபர் டிரம்ப்பின் ஓவல் அலுவலகத்தில் இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆனால், அப்போது எலான் மஸ்க்கின் நான்கு வயது சிறுவன் செய்த செயல்கள் இணையத்தில் டிரெண்டாகின.
அதவது கடந்த பிப்ரவரி 11ம் தேதி எலான் மஸ்க் தனது 4 வயது மகன் X Æ A-Xiiஐ (ஆம், எலான் மஸ்க் தனது மகனுக்கு இப்படி தான் பெயர் வைத்திருக்கிறார்) உடன் அழைத்துச் சென்றார். எலான் மஸ்க் தீவிரமாகச் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்த போது, 4 வயது மகன் செய்த செயல்கள் தான் இப்போது வரை இணையத்தில் டிரெண்டாகி கொண்டு இருக்கிறது.
எலான் மஸ்க் மகன்
எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் பேச அவரது மகன் டிரம்பிடம் சென்று பேசிக் கொண்டு இருந்தார். அவர் என்ன பேசினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அவரது வாய் அசைவை வைத்து அவர் என்ன சொல்லி இருக்கலாம் என்பது குறித்து பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
வாயை மூடுங்க
அவரது வாய் அசைவை வைத்துப் பார்க்கும் போது அதிபர் டிரம்பிடம், "நீங்க வாயை மூடுங்க" என்றோ அல்லது "நீங்க அதிபர் அல்ல... நீங்க உடனே வெளியேற வேண்டும்" என்றோ சொல்லியிருக்கலாம் என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சில மணி நேரத்தில் பல லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது.
I'M SCREAMINGpic.twitter.com/Q77UDXrNFZ
— chris evans (@notcapnamerica) February 12, 2025
பரபரக்கும் நெட்டிசன்கள்
இது தான் இப்போது அங்கு ஆன்லைனில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தை நிஜமாகவே அப்படிப் பேசியதா இல்லையா என்பது குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள். ஒரு தரப்பினர் வாய் அசைவை வைத்துப் பார்க்கும் போது மிகத் தெளிவாகத் தெரிவதாகக் கூறுகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் குழந்தையின் வாய் அசைவை வைத்து எல்லாம் துல்லியமாகச் சொல்லவே முடியாது எனச் சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications