"நீ சாக போற.." சரமாரியாக வந்த கொலை மிரட்டல்.. 90 நிமிடம் வாய் திறக்காமல் உட்கார்ந்த எலான் மஸ்க்
வாஷிங்டன்: எலான் மஸ்க் தனது வீடியோ கேமிங் திறமையைக் காட்ட லைவ் ஸ்ட்ரீமிற்கு வந்தார். ஆனால், ஏன் தான் லைவ் செய்தோம் என யோசிக்கும் அளவுக்கு நெட்டிசன்கள் அவரை கலாய்த்துத் தள்ளிவிட்டனர். ஒரு கட்டத்தில் அது கொலை மிரட்டல் வரையும் கூட எல்லை மீறியது. இதனால் நொந்து போன எலான் மஸ்க் லைவ் ஸ்டீரமிங்கை பாதியிலேயே முடித்துக் கொண்டார்.
இப்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டிரம்ப் நிர்வாகத்தில் இவர் டாஜ் துறையையும் கவனித்து வருகிறார். அதேநேரம் எலான் மஸ்க் எடுக்கும் பல்வேறு முடிவுகள் அமெரிக்கா முழுக்க எதிர்ப்புகளைக் கிளப்பி வருகிறது. அவருக்கு எதிராகப் போராட்டங்களும் நடந்து வருகிறது.

எலான் மஸ்க்
இதற்கிடையே எலான் மஸ்க் தனது கேமிங் திறமையைக் காட்ட வீடியோ கேம் விளையாடியபடி அதை லைவ் ஸ்ட்ரீம் செய்தார். ஆனால், அப்போது நெட்டிசன்கள் கேப் விடாமல் அவரை கலாய்த்துத் தள்ளினர். இதனால் வேறு வழியில்லாமல் அவர் லைவ் ஸ்ட்ரீமை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார்.
எலான் மஸ்க் தனது பிரைவேட் ஜெட்டில் இருந்தபடி வீடியோ கேமை விளையாடினார். தனது ஸ்டார்லிங்க் இணையதளம் எவ்வளவு வலிமையானது என்பதைக் காட்டவே அவர் பிரைவேட் ஜெட்டில் இருந்தபடி விளையாடியிருக்கிறார். அதாவது ஜெட்டில் செல்லும்போதும் கூட வீடியோ கேம் விளையாடும் அளவுக்கு இணையம் வலிமையாகக் கிடைக்கும் என்பதைக் காட்டுவதே அவரது திட்டம்.
வீடியோ கேம்
அதன்படி எலான் மஸ்க் முதலில் பிரபல ரோல்-பிளேயிங் வீடியோ கேமான 'பாத் ஆஃப் எக்ஸைல் 2' விளையாடினார். ஆனால், முதல் போட்டியிலேயே அவர் தோற்கடிக்கப்பட்டார். அப்போது ஆரம்பித்த நக்கல்களும் கிண்டல்களும் தொடர்ந்து கொண்டே இருந்தது. எலான் மஸ்க் கடந்த காலங்களில் பல முறை தனது கேமிங் திறன்களைப் பற்றி அவரே புகழ்ந்து பேசியிருக்கிறார். அப்படியிருக்கும்போது முதல் போட்டியிலேயே கொடூரமாகத் தோற்றுப் போனார்.
வாய் திறக்காத எலான் மஸ்க்
இதனால் எலான் மஸ்க் அடுத்த 90 நிமிடங்கள் வாயையே திறக்காமல் விளையாடினார். நெட்டிசன்கள் இதை வைத்து கொடூரமாக நக்கலாக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் கொலை மிரட்டல்கள், உருவக் கேலி என்ற அளவுக்கு நிலைமை மோசானது. நெட்டிசன் ஒருவர், "உனக்கு உண்மையான நண்பர் என யாரும் இல்லை.. நீ தனியாகத் தான் செத்துப் போகப் போகிறாய்" எனப் பதிவிட்டிருந்தார். மற்றொரு நபர், "நீ உனது எல்லா திருமணங்களையும் அழித்தது போல இப்போது நாட்டையும் அழித்து வருகிறாய்" என்று பதிவிட்டார்.
எல்லை மீறிய நெட்டிசன்கள்
சிலர் அவரை உருவக்கேலி செய்த நிலையில், சிலர் அவரது டெஸ்லா நிறுவனம் குறித்தும் மோசமான கருத்துகளைப் பதிவிட்டனர். சமீபத்தில் சோஷியல் மீடியா பிரபலமான ஆஷ்லே செயிண்ட் கிளேர் என்பவர் தான் எலான் மஸ்க்கின் 13வது குழந்தையைப் பெற்றெடுத்தாக கூறியிருந்தார். அதை வைத்தும் கூட நெட்டிசன்கள் நக்கலடித்தனர். சிலர் தானும் எலான் மஸ்க் மகன் என்றும் தன்னையும் மஸ்க் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டனர். ஒருவர் அதை விட மேலே போய்.. தான் எலான் மஸ்கின் தந்தை என்றும் அவர் தன்னையும் கவனிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்.
கொலை மிரட்டல்
ஒரு கட்டத்தில் இது எல்லை மீறியும் சென்றது. எலான் மஸ்க் கேரக்டர் வீடியோ கேமில் செத்துப்போனது. அதைப் பிடித்துக் கொண்ட நெட்டிசன்கள், "செத்து போ.. செத்துப் போ.." என்று கேப் விடாமல் பதிவிட்டனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எலான் மஸ்க்கால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியவில்லை. லைவ் ஸ்டீரிமை நிறுத்தி எலான் மஸ்க், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகக் கூறி சமாளித்தார். இது மட்டுமின்றி இந்த வீடியோவையும் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கிவிட்டார். அதேநேரம் அதை வீடியோவாக எடுத்த நெட்டிசன்கள் அதை ரெட்டிட் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications