"நாஜி" சல்யூட்.. முதல் நாளே எலான் மஸ்க் கிளப்பிய சர்ச்சை! கொந்தளித்த மக்கள்! ஆனா கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் நேற்று பதவியேற்றார். முதல் நாளான நேற்றே சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டது. அதாவது டிரம்ப் அமைச்சரவையில் உள்ள எலான் மஸ்க் நேற்று தங்கள் ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போது ஒருவித சல்யூட் வைத்தார். அது பார்க்க அப்படியே நாஜி சல்யூட் போலவே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது அங்கு மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் நேற்றைய தினம் தான் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் 47ஆவது அதிபராகப் பதவியேற்றார். இதற்காகத் தலைநகர் வாஷிங்டன் முழுக்க டிரம்ப் ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர்.

donald trump inauguration donald trump elon musk

டிரம்ப்:

இதற்கிடையே டிரம்ப் பதவியேற்ற முதல் நாளே வழக்கம் போலப் பல சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டது. நேற்று திங்கள்கிழமை நடந்த டிரம்ப் வெற்றி பேரணியில் உரையின் போது தொழிலதிபர் எலான் மஸ்கின் சைகை பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது அவர் யூசர்களை கொன்று குவிந்த ஹிட்லரின் நாஜி படைகளின் வணக்கத்தைப் போல சல்யூட் அடித்ததாகச் சர்ச்சை வெடித்துள்ளது.

சல்யூட்:

அந்த பேரணியில் பேசிய எலான் மஸ்க், "இது சாதாரண வெற்றியல்ல. மனித நாகரிகம் சந்தித்த மிக பெரிய தடையை நீக்கியுள்ளோம். இது மிகவும் முக்கியமானது. இதைச் சாத்தியமாக்கிய மக்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி" என்று பேசிய அவர் தனது வலது கையை மார்பின் மேல் வைத்து, கையை மேல்நோக்கி நீட்டி வணக்கம் வைத்தார். அதேபோல திரும்பி மீண்டும் மக்கள் கூட்டத்தை நோக்கி இந்தச் சைகையைக் காட்டினார்.

அதன் பிறகு தொடர்ந்து பேசிய எலான் மஸ்க், "என் இதயம் உங்களிடம் நன்றி சொல்கிறது. மனித இனத்தைக் காப்பாற்றிய உங்கள் ஒவ்வொருவரிடமும் வந்து எனது இதயம் நேரில் நன்றி சொல்கிறது" என்று சொல்லி தனது உரையை முடித்துக் கொண்டார். இதுவே இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனென்றால் அவரது வணக்கம் பார்க்க நாஜி சல்யூட் போல இருந்ததாகப் பலரும் சாடினர்.

கிளம்பிய விமர்சனம்:

இது தொடர்பாக வரலாற்றாசிரியர் ரூத் பென்-கியாட், "இது ஒரு நாஜி சல்யூட். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை" என்றார். அதேபோல அமெரிக்காவில் நாஜி குறித்துப் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர் கிளாரி ஆபினும் கூட இது நாஜி சல்யூட் போலவே இருப்பதாகச் சாடியுள்ளார்.

அதேநேரம் எலான் மஸ்க் தனது இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். தங்களுக்கு எதிரான அனைவரையும் நாஜிக்கள் என முத்திரையிடப் பார்க்கிறார்கள்.. இனியும் மக்கள் இதைப் பார்த்து ஏமாற மாட்டார்கள். இது ரொம்பவே பழைய டிரிக் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.


கடைசியில் ட்விஸ்ட்:

இதில் கடைசியில் ட்விஸ்ட் என்னவென்றால் யூத ஆதரவு அமைப்பான ஏடிஎல் என்ற அமைப்பே எலான் மஸ்க் செய்தது நாஜி சல்யூட் இல்லை எனக் கூறிவிட்டது. இது தொடர்பாக அந்த அமைப்பு தனது ட்விட்டரில், "எலான் மஸ்க் செய்தது ஒரு நாஜி சல்யூட் இல்லை. அவர் உற்சாக மிகுதியில் ஏதோ ஒன்று செய்யப் போய்.. அது ஏதோ மோசமாக முடிந்துவிட்டதைப் போலவே தெரிகிறது. மற்றபடி அது நாஜி சல்யூட் போலத் தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளது. மேலும், சில ஆய்வாளர்களும் எலான் மஸ்கிற்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஏன் முக்கியம்:

அமெரிக்காவைப் பொறுத்தவரை இதுபோன்ற யூச மத சார்ந்த விஷயங்கள் முக்கியமானதாகக் கவனம் பெறும். என்ன தான் அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் வெறும் 2.4% மட்டுமே யூதர்கள் இருந்தாலும் கூட அங்குச் செல்வத்திலும் அதிகாரத்திலும் கணிசமான பங்கு யூதர்கள் வசமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+