1,454 அடி உயரத்தில் ‘லவ் ப்ரோபஷல்' ஞாபகம் இருக்கா? டிரெண்ட்டான ரஷ்யா ஜோடிக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் 1,454 அடி உயரம் கொண்ட 'எம்பயர் ஸ்டேட்' கட்டிடத்தின் மீது ஏறி மொத்த உலகமே வியந்து பார்க்கும் வகையில் காதலை வெளிப்படுத்தி டிரெண்ட்டான ரஷ்ய ஜோடிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக அந்த ஜோடி கைதான நிலையில் அவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

ஜூலை 1ம் தேதி.. இந்தியா உள்பட உலகம் முழுவதும் இணையதளத்தில் ஒரு வீடியோ டிரெண்டானது. அந்த வீடியோ என்னவென்றால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1,454 அடி உயரம் கொண்ட 'எம்பயர் ஸ்டேட்' கட்டடத்தின் மீது ஏறி ரஷ்ய காதல் ஜோடி காதலை மாறி மாறி சொல்லி கொண்டது தான்.
குறிப்பாக அவ்வளவு உயரத்தில் வைத்து இளைஞர், அந்த இளம்பெண்ணுக்கு முட்டிப்போட்டு காதலை வெளிப்படுத்தி மோதிரம் அணிவித்து திருமணத்துக்கு சம்மதம் கேட்டது எல்லாம் வேற லெவல். அதேபோல் உச்சியில் அவர்கள் அணிந்திருந்த கருப்பு நிற உடையிலேயே கொடி ஒன்றையும் பறக்கவிட்டனர்.
அதில் ''அதிகாரத்தின் மீதான காதலை விட அன்பின் சக்தி மேலோங்கும்போது உலகம் அமைதியை காணும்'' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தனர். சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் இந்த 'லவ் ப்ரோபோஷல்' இருந்தது. இந்த ஜோடி ரஷ்யாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அதோடு அவர்களின் பெயர்கள் ஏஞ்சலா நிகோலாவ் (வயது 33) மற்றும் இவான் குஸ்நெட்சோவ் (32) என்பது தெரியவந்தது. இவர்கள் மலையேற்ற வீரர், வீராங்கனைகள் ஆவார்கள். இவர்களை மையப்படுத்தி 2024ம் ஆண்டில் 'ஸ்கைவாக்கர்ஸ்: எ லவ் ஸ்டோரி' என்ற பெயரில் ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணப்பம் ஜனவர 'சன்டான்ஸ்' திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இதன்மூலம் இந்த ஜோடி புகழ்பெற்றனர். இவர்கள் 2 பேரும் உலக அமைதி மற்றும் காதலின் வலிமை பற்றி உலகுக்கு உணர்த்த இந்த செயலில் ஈடுபட்டனர். அதன்பிறகு கட்டடத்தில் இருந்து இறங்கி வந்தபோது போலீசாரால் கைது செய்தனர்.
இந்த ஜோடி 'எம்பயர் ஸ்டேட்' கட்டடத்தில் ஏறி காதலை வெளிப்படுத்திய வீடியோ இணையதளங்களில் வைரலானது. அனைவரும் இந்த வீடியோவை பகிர்ந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு ஏஞ்சலா - இவான் ஜோடி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் முடிவில் இவர்கள் 2 பேரையும் அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு நாடு கடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் ஏஞ்சலா - இவான் ஜோடி விசாரணைக்காக நியூயார்க்கில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணை 2027 ம் ஆண்டு ஜனவரி 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும் நீதிமன்றத்தில் ஆஜரானபிறகு இவான் அளித்த பேட்டியில், ''நாங்கள் அமெரிக்காவில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தவில்லை. யாருக்கும் இடையூறு செய்யவில்லை. யாரையும் ஆபத்தில் தள்ள வேண்டும் என்ற நோக்கமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் அன்பை பரப்ப வேண்டும் என்ற ஒரு செய்தியை மட்டுமே தெரிவிக்க விரும்பினோம்'' என்றார்.
ஏஞ்சலா கூறுகையில், ''இன்றைய உலகம் துயர் நிறைந்து உள்ளது. இதனால் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கும் வகையில் ஒரு செயலை நாங்கள் செய்தோம். எங்களை நாடு கடத்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டும்’’ என்று கூறி கண்கலங்கினார்.
இந்த ஜோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நோவாம் பியாலே கூறுகையில், ''இந்த ஜோடி மீண்டும் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டால் அவர்களின் நிலைமை மோசமாகும். இவான் உக்ரைனுக்கு எதிரான போருக்கு அனுப்பி வைக்கப்படுவார். ஏஞ்சலா தனது செயல்பாட்டிற்காக சிறையில் அடைக்கப்படலாம்'' என்று தெரிவித்தார்.
'' என்றார்.


Click it and Unblock the Notifications
