"உடல் முழுக்க காயங்கள்.. இரவில் தூங்கும்போது.. ஏலியன்கள் என்னை கடத்தி சென்று.." குமுறும் இளம்பெண்!
வாஷிங்டன்: வேற்று கிராகவாசிகள் குறித்து பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்த பிரபஞ்சத்தில் நம்மைப் போலவே மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் வசிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதைத் தான் ஆய்வாளர்கள் வேற்று கிரக வாசிகள் எனக் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம் ஏற்கனவே கடந்த காலங்களில் பூமியில் வேற்று கிரக வாசிகள் வந்து இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் சில கூறுகின்றனர். இது தொடர்பாக நாசாவும் தீவிர ஆய்வை மேற்கொண்டே வருகிறது

இங்கிலாந்து பெண்
தெற்கு இங்கிலாந்தின் கென்ட்டின் ராம்ஸ்கேட் பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான மரியா லீவா. இவர் தன்னை பலமுறை வேற்று கிரக வாசிகள் கடத்தி உள்ளதாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தூங்கிக் கொண்டு இருக்கும் போது, பல முறை தன்னை கிரக வாசிகள் கடத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண் விழிக்கும் போது, ஏலியன்களால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் இருக்கும் என்றும் கூறுகிறார் மரியா லீவா.

ஏலியன்
கெண்ட் பகுதியில் வேலை செய்து வரும் மரியா லீவா, பல சமயங்களில் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள இடங்களில் எழுந்து உள்ளதாகவும் சில சமயங்களில் டாக்ஸி பிடித்து வீட்டு திரும்பும் அளவுக்குத் தொலைவான இடங்களில் கூட எழுந்து உள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதுவே வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்ததற்கான சான்று என்றும் அவர் உறுதியாகக் கூறுகிறார்.

சிறு வயதில் இருந்து
இது தொடர்பாக மரியா லீவா மேலும் கூறுகையில், "எனக்கு நினைவில் இருக்கும் காலத்தில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. நான்கு வயதாக இருந்த சமயத்தில் இருந்து, இது நடக்கிறது. சிறு வயதில் நான் கொலம்பியாவில் இருந்த சமயத்திலும் கூட தொலை தூரத்தில் எழுவேன். அப்போது ஏன் என்னை இங்கே விட்டுச் செல்கிறீர்கள். என்னைத் திரும்ப வீட்டிற்குக் கூட்டிப் போங்கள் என்று எல்லாம் நான் கதறி இருக்கிறேன்.

பார்த்துள்ளேன்
பல சமயங்களில் என்னால் வானத்தில் இருக்கும் உயிரினங்களைப் பார்க்க முடிந்துள்ளது. அதிகாலை இரண்டு மணி முதல் நான்கு மணி வரை டெலிபதி மூலம் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். பல சமயங்களில் அப்படி நான் விழித்திருக்கிறேன். ஜன்னலுக்கு அருகே செல்லச் சொல்வார்கள். வெளியே சில வினோதமான பொருட்கள் இருப்பதை நான் பார்த்துள்ளேன். இது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோ கூட என்னிடம் உள்ளது.

காயங்கள்
வேற்று கிரக வாசிகள் என்னை விட்டுச் செல்லும் போது, என் உடலில் வித்தியாசமான காயங்கள் இருக்கும். சிறு காயங்கள், விரல் அடையாளங்கள், வெட்டுக்கள் ஆகியவை இருக்கும். அப்போது தான் இரவில் ஏதோ நடந்துள்ளது என்பது எனக்குப் புரியும். எனது மகளுக்கும் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அவளுக்கு 10 வயது இருக்கும் போது, அவள் முதலில் வேற்று கிரக வாசிகளைப் பார்த்துள்ளார். அதன் பின்னர் பல நேரங்களில் அவளுக்கும் இதுபோல நடந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா
முன்னதாக , UFOs என்று குறிப்பிடப்படும் ஏலியன்கள் குறித்த அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் சில முக்கிய சமீபத்தில் வெளியாகின. அதில் அமெரிக்காவில் பல சாட்சிகள் அளித்த தகவலின்படி பல UFOs மனிதர்களுடன் உடலுறவு கொண்டதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஏலியன் மூலம் பெண் ஒருவர் கர்ப்பமாகி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
