"டீல் இல்லை.." டிரம்பிற்கே கடிவாளம் போட்ட ஐரோப்பிய ஒன்றியம்.. இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டார்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார். இதற்கிடையே டிரம்பிற்கு பதிலடி கொடுக்க ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்துள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக டீலை நிறுத்தி வைப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இது டிரம்பிற்கு வைக்கப்பட்ட செக் ஆகவே பார்க்கப்படுகிறது.

ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள கிரீன்லாந்து இப்போது டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமானது. அந்தப் பிராந்தியத்தில் சீனா, ரஷ்யா ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய கிரீன்லாந்து அமெரிக்கா வசம் ஒப்படைக்க வேண்டும் என டிரம்ப் சொல்லி வருகிறார். இதை ஐரோப்பிய நாடுகள் எதிர்க்கும் நிலையில், அவர்களுக்கு வரி விதிக்கப் போவதாக மிரட்டி வருகிறார்.

Donald Trump Greenland world

ஐரோப்பிய ஒன்றியம்

இதற்கிடையே டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தக ஒப்பந்த அங்கீகாரத்தை ஐரோப்பிய ஒன்றியம் தற்போது நிறுத்தி வைத்துள்ளனர். நீண்டகால நட்பு நாடுகளான ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக டிரம்ப் செயல்பட்டால் அமெரிக்காவுக்கு எப்படிப் பதிலடி கொடுக்கலாம் என ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் உலகின் அனைத்து நாடுகள் மீதும் இறக்குமதி வரியை அறிவித்தது அனைவருக்கும் தெரியும். இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடந்த பேச்சுவார்த்தை முடிவில் சில பொருட்களுக்கு வரிகளை நீக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. கடந்தாண்டு இந்த டீல் குறித்த அறிவிப்பு வெளியானது. அது தொடர்பாக வாக்குப்பதிவு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்தது.

முக்கிய நடவடிக்கை

அடுத்த சில வாரங்களில் இந்த வாக்குப்பதிவு நடக்கும் எனச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் அந்த வாக்குப்பதிவை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்துள்ளன. அதேநேரம் இப்படி ஒத்திவைக்க முடிவு செய்ததாலேயே இந்த ஒப்பந்தம் ரத்தானதாகக் கருத முடியாது. இருப்பினும், இது டிரம்பிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பும் ஒரு எச்சரிக்கை மெசேஜ்ஜாகவே பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "உண்மையில் இது முக்கியமான நடவடிக்கை. அமெரிக்காவை வழிக்குக் கொண்டு வர இது வேலை செய்யும் என்றே நினைக்கிறேன். ஐரோப்பிய சந்தையை விட்டுக்கொடுக்க அமெரிக்கா சம்மதிக்கும் என நான் நினைக்கவில்லை," என்றார்.

பின்னணி

கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் மற்றும் அதற்கு ஆதரவாக இருக்கும் இணங்காத பிரான்ஸ், ஜெர்மனி உட்பட ஆறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டியிருந்தார். அதற்கு பதிலடியாகவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கிரீன்லாந்து மீதான அமெரிக்க அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று ப்ரூசெல்ஸில் ஒரு அவசர மாநாட்டை நடத்துகின்றனர்.

பதிலடி என்ன

டிரம்ப் பின்வாங்கவில்லை எனில், கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, அமெரிக்கா மீது 93 பில்லியன் யூரோக்கள் ($108 பில்லியன்) வரி விதிப்பது உள்ளிட்ட பதிலடி குறித்து ஒன்றியம் பரிசீலிக்கிறது. கடந்தாண்டு டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது முதலில் வரி விதித்த போது, அமெரிக்காவுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் யோசித்தது. அதை இப்போது மீண்டும் ஆயுதமாகப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+